Krishnagiri

News September 5, 2024

தனியார் பள்ளிகளுக்கான நல்லாசிரியர் விருது

image

கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் முதல்வரும், இயற்பியல் ஆசிரியருமான விஜயகுமார் அவர்கள் ஆசிரியர் பணியில் சிறந்த சேவை புரிந்ததற்காக தனியார் பள்ளிகளுக்கான தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்றதை பாராட்டி பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணி, தாளாளர் கிருஷ்ணவேணி மணி செயலாளர் சந்தோஷ் மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News September 4, 2024

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை மூடக்கோரி எ.வ.வேலு கடிதம்

image

தமிழகத்தில் காலாவதியான 4 சுங்கச்சாவடிகளை மத்திய அரசு உடனடியாக மூட வேண்டுமென தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார். மத்திய அமைச்சர் நிதின்கட்கரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் 15 ஆண்டுகளை கடந்த பிறகும் கட்டணம் வசூலிக்கின்றன. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் அந்த கடிதத்தில் அமைச்சர் எ.வ.வேலு கோரியுள்ளார்.

News September 4, 2024

கிருஷ்ணகிரி தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு விருது

image

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 2024 – தேர்வு செய்யப்பட்ட தொடக்கக் கல்வி இயக்கத்தை சார்ந்த ஆசிரியர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. உ.வெங்கடேஸ்வரா தலைமையாசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குட்டூர் பருகூர். வெ.நாகராஜூ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சின்னஉப்பனூர் தளி. இரா.ஜெயஷீலா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சீனிவாசபுரம் பருகூர். ஜி.தங்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மரிமானப்பள்ளி பருகூர்.

News September 4, 2024

கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்களுக்கு விருது 

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது- 2024 அறிவிக்கப்பட்டுள்ளது. இரா.ஸ்வர்ணா பட்டதாரி ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி சூசுவாடி, ஒய். நாராயணப்பா முதுகலையாசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி நல்லூர், சி.பிரபா அரசு உருது மேல்நிலைப்பள்ளி ஒசூர், சா.சாமுண்டீஸ்வரி உடற்கல்வி ஆசிரியர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி போச்சம்பள்ளி, ஆகியோர் விருதுகளை பெறவுள்ளனர். 

News September 4, 2024

கிருஷ்ணகிரி பெண் ஒலிம்பிக்கில் சாதனை

image

ஒசூா் முனீஸ்வர் நகரைச் சேர்ந்தவர் சிவன். இவர் டைட்டான் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் நித்யா ஸ்ரீ பாட்மிண்டன் விளையாட்டில் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலம் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,ஒசூர் எம்எல்ஏ ஒய். பிரகாஷ் என அனைவரும் பாராட்டினர்.

News September 4, 2024

கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் உத்தரவு

image

கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சிலை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி நகரில் விநாயகர் சிலை விற்பனை செய்பவர்கள் 12 அடிக்கு உயரமான சிலைகளை விற்பனை செய்யக் கூடாது. களிமண்ணால் ஆன சிலைகளை மட்டுமே வைக்கவும் நகரில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News September 4, 2024

கிருஷ்ணகிரியில் விநாயகர் சிலை வைக்க கட்டுப்பாடு

image

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், மகராஜகடை, வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைக்க கட்டாயம் அனுமதி பெற வேண்டும். சிலைகள் வைக்கப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். மேலும் வழாக்குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும், போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி கூறியுள்ளார். ஷேர் பண்ணுங்க.

News September 3, 2024

கிருஷ்ணகிரி பாலியல் விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது

image

கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒரு தனியார் பள்ளி முதல்வர் விநோதினியை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரியில் போலி என்சிசி நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை மூடி மறைத்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News September 3, 2024

ஓசூரில் உலகளாவிய தொழில்நுட்ப மையம்

image

ஓசூரில் VST Tillers & Tractors நிறுவனம் சுமார் ரூ.100 கோடி செலவில் உலகளாவிய தொழில்நுட்ப மையத்தை அமைக்க உள்ளது. விவசாய உபகரணங்கள் மற்றும் டிராக்டர்கள் தயாரிப்பில் இந்த நிறுவனம் தற்போது முன்னணியில் உள்ளது. ஓசூரில் உலகளாவிய தொழில்நுட்ப மையத்தை நிறுவுவதன் மூலம் அதன் R&D (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) திறன்களை மேம்படுத்த உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News September 3, 2024

கிருஷ்ணகிரி டாஸ்மாக்கில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை

image

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 117 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தினமும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ரூ.2.5 கோடி வரையில் மது விற்பனை நடைபெறுகிறது. இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் முதல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் மது விற்பனை அமலுக்கு வரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!