India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிவராமனுக்கு உதவியதாக இருந்ததாக நாம் தமிழர் கட்சியின் பர்கூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக இருந்த முன்னாள் நிர்வாகி கருணாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சிவராமன் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராவின் கருவிகளை தீ வைத்து எரித்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இஸ்லாம்பூர் கிராமத்தில் பாறை குன்றுகளில் சிறுத்தை ஒன்று பதுங்கி இருந்து தெரு நாய்கள் மற்றும் ஆடுகளை கடித்து குதறியது. அப்பகுதியை சேர்ந்த ரத்தினம்மாள் என்பவர் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற ஆட்டை சிறுத்தை கடித்து தூக்கி சென்றது. இந்நிலையில் தாசில்தார் கோகுல்ராஜ் மற்றும் வனத்துறையினர் இஸ்லாம்பூர் பகுதியில் நேற்று ஆய்வு செய்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுத்தனர்.
யானைகளை மின்சாரம் தாக்குவதை தடுப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள 116 இடங்களில் வடிவமைக்கப்பட்ட தானியங்கி மின் நிறுத்த கருவியானது மின்வாரியம் சார்பில் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் மின்சார ஒயர்களில் லேசான அதிர்வு ஏற்பட்டாலே, மின்சாரம் தானாக நின்று விடும் வகையில் இந்த கருவி–யின் செயல்பாடு அமைந்துள்ளதாக மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவராமனுக்கு உதவிய அரசுப் பள்ளி NCC அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கோபு என்பவர் மாவட்ட NCC ஒருங்கிணைப்பாளரும், ஆண்கள் பள்ளி NCC அலுவலருமாவார். போலி NCC முகாமில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் சிவராமன் உயிரிழந்த நிலையில், 13 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், கோபு என்பவரும் கைதாகியுள்ளார்.
தமிழக அரசின் சார்பாக மின்சாரத் துறையின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 76,272 எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஓர் இலவச மின் இணைப்பிற்கு, ஒரு வருடத்திற்கு ரூ.30,000 வீதம் தமிழக அரசு செலவிடுகிறது. ஆகையால் மாவட்டத்தில் உள்ள மின் இணைப்புகளை வேளாண்மைத்துறை, மின்சாரத்துறை அலுவலர்கள் மூலம் சரிபார்த்து அறிக்கை அளிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
அன்னை தெரசா மகளிர் வளாகம், நுங்கம்பாக்கம், சென்னை-34-இல் நடத்தப்படும் கண்காட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மாநில அளவில் நடைபெறும் நவராத்திரி விற்பனை கண்காட்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் செப் 9 -க்குள் http://exhibition.mathibazaar.com/login இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சோர்ந்த ஆசிரியர் சபரிநாதன்(36) என்பவருக்கு போனில் குறைந்த முதலீட்டில் அதிக வருவாய் ஈட்டலாம் என்ற குறுஞ்செய்தி வந்தது. அதை உண்மை என நம்பி ரூ 6.30 லட்சத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு செலுத்தினார். ஆனால், அவருக்கு எந்த பொருள்களும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சபரிநாதன் கிருஷ்ணகிரி எஸ்.பி அலுவலக இணைய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு செப்டம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் மன அழுத்தம் உள்ளதா என கண்டறியப்பட்டுள்ளதாகவும், பன்னோக்கு சிறப்பு குழு அறிக்கை மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்கால பாதுகாப்பு குறித்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: போலி என்சிசி முகாம் நடத்தப்பட்ட கிருஷ்ணகிரி பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி நியமிக்க வேண்டும். சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டதால் சிறப்பு அதிகாரியை நியமிக்க கல்வி இயக்குநருக்கு பரிந்துரைக்க வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
சூளகிரியில் தெருநாய்கள் சாலைகளில் கூட்டம், கூட்டமாக திரிகின்றன. நேற்று மாலை வாணியர் தெருவில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று அந்த பகுதியில் நடந்து சென்றவர்களை துரத்தி துரத்தி கடித்து குதறியது. இதில் நான்கு சிறுவர்கள், இரண்டு பெண்கள் உள்பட 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். தெரு நாய்கள் 7 பேரை கடித்து குதறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
Sorry, no posts matched your criteria.