India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தல்சூர் கிராமத்தில் ஏரி அருகே 4 காட்டு யானைகள் சாலையை கடந்து சென்றன. சாதாரணமாக இந்த காட்டு யானைகள் சாலையில் சென்றதால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த காட்டு யானைகள் கிராமப் பகுதிகளில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள ராகி, நெல், தக்காளி உள்ளிட்ட பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ரசாயன நுரையால் மூடப்பட்டிருந்த ஓசூர் கெலவரப்பள்ளி அணை பகுதியில் நுரை குறைந்து போக்குவரத்து சீரானது. அணையில் இருந்து 4,600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அதிகப்படியான ரசாயன நுரை 30 அடி உயரத்துக்கு சாலையை ஆக்கிரமித்தது. இதனால் நந்திமங்கலம், சேவி செட்டிப்பள்ளி, கொவலதாசபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 10 கிலோமீட்டர் சுற்றி வரவேண்டிய நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொண்டர் அணி சார்பாக மட்டும் சுமார் 45 பேருந்துகளில் 2000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொண்டர் அணி சார்பிலும், கட்சி நிர்வாகிகள் சார்பிலும் பல்வேறு அளவுகளில் பேனர்கள் வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள், அறிவு சார் குறைபாடு உள்ளவர்கள், பேச்சு திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் /நிறுவனங்கள் மாநில விருதுகளுக்கு 28.10.2024 -க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று தனது செய்தி குறித்து தெரிவித்துள்ளார்.
தேன்கனிக்கோட்டையை அடுத்த கோபசந்திரத்தை சோ்ந்த ரவிக்குமாரின் கோழி பண்ணையில் பீகாரை சோ்ந்த முகமது ஜகவுல்லா தனது குடும்பத்துடன் வேலை செய்து வருகிறாா். இவா்களது குழந்தைகள் சாா்பானு(4),ஆயுத் காதூன் (3) ஆகிய இருவரும் நேற்று கோழி பண்ணையில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த மூட்டைகள் சரிந்து விழுந்ததில் 2குழந்தைகளும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு கன அடி தண்ணீர் 6.792 திறக்கப்பட்டுள்ளதால் ஒன்பது நாளாக மூன்று மாவட்டம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அனைத்து பணி இடங்களில் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 (தடுப்பு, தீர்வு, தடை) -ன் படி உள்ளக குழு (Internal Committee) அமைத்திட தெரிவிக்கப்படுகிறது. இந்த குழுவில் 50% பெண்கள் இடம் பெற வேண்டும். குழு அமைக்காத அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மீது ரூ.50,000 விதிக்கப்படும் என எச்சரித்தார்.
ஓசூர் அருகே அணையிலிருந்து வெளியேறிய ரசாயன நுரை, தட்டகானப்பள்ளி அருகே உள்ள ஆற்றின் தரைப்பாலத்தை மூழ்கடித்ததால், அதனை அகற்ற முடியாமல் திரும்பிய தீயணைப்புத் துறையினர். போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இன்று ரசாயன நுரை குறைந்ததை அடுத்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
Sorry, no posts matched your criteria.