Krishnagiri

News October 28, 2024

கிருஷ்ணகிரி: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே.எம். சரயு இ. ஆ. ப., இன்று 28.10.2024 பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள் உள்ளார். இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்தனர்.

News October 28, 2024

மாணவியை தாக்கிய உடற்பயிற்சி ஆசிரியர் கைது

image

ஓசூர் அருகே தனியார் பள்ளியில் ஆசிரியையின் கைக்கடிகாரத்தை திருடியதாக மாணவியை உடற்பயிற்சி ஆசிரியர் நடுரோட்டில் கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து பாகலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், மாணவியை தாக்கிய பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை போலீசார் கைது செய்துள்ளனர். 

News October 28, 2024

கிருஷ்ணகிரியில் சூடு பிடித்த தீபாவளி வியாபாரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 31.10.2024 வியாழக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நகைகள், ஆடைகள், இனிப்பு கார வகைகள் மற்றும் பட்டாசுகள் என்று அனைத்து விதமான வியாபாரங்களும் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் நேற்று விடுமுறை என்பதால் புத்தாடைகள் வாங்க சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

News October 28, 2024

கிருஷ்ணகிரியில் தீபாவளி கொண்டாட கட்டுப்பாடு

image

கிருஷ்ணகிரியில் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் சரயு வேண்டுகோள் விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும், அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறித்தியுள்ளார்.

News October 28, 2024

வேப்பனப்பள்ளி அருகே சுற்றித்திரியும் யானை

image

வேப்பனப்பள்ளிக்கு அடுத்த மகராஜகடை வனப்பகுதியில் இருந்து 3 நாட்களாக ஒரு யானை முகாமிட்டுள்ளது. இந்த யானை தமிழக எல்லையில் உள்ள கொங்கனப்பள்ளி, எப்ரி வனப்பகுதியில் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே, இரவு நேரங்களில் நடமாடும் யானைகளால்  விவசாயிகள், பொதுமக்கள் விவசாய நிலத்தில் தங்க வேண்டாம். வனப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

News October 28, 2024

கர்நாடக மது பாக்கெட்டுகள் விற்பனை செய்து வந்தவர் கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனுசோனை – பேவநத்தம் செல்லும் சாலையில் கர்நாடக மது பாக்கெட்டுகள் விற்பனை செய்து வந்த கெலமங்கலம் நேதாஜி நகரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை ஆய்வாளர் பெரிய தம்பி, உதவி ஆய்வாளர் சிற்றரசு தலைமையிலான போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து கர்நாடகா மது பாக்கெட்டுகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

News October 27, 2024

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் 

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 27, 2024

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து; ஓட்டுநர் உட்பட 2 பேர் காயம்

image

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி கொண்டை ஊசி வளைவில் சென்ற சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இன்று விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் உடன் சென்ற ஒருவர் என இரண்டு பேர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற அஞ்செட்டி போலீசார் வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்து விசாரித்து வருகின்றனர்.

News October 27, 2024

கிருஷ்ணகிரியில் புகையிலை விற்ற பத்து பேர் கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்த புகையிலை பொருட்கள் விற்றதற்காக அந்தந்த பகுதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், மகாராஜகடை, ஓசூர், பேரிகை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற சுமார்  10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 27, 2024

கிருஷ்ணகிரியில் ரேஷன் கடைகள் வழக்கம்போல் இயங்கும்

image

தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 27-10-2024, தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே, கிருஷ்ணகிரியில் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.