India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு தொடர்பான உதவிகளுக்கு மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் சார்பில் பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 அழைத்து பொதுமக்கள் உதவிகள் பெறலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. எனவே, இது குறித்து தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், கிருஷ்ணகிரிக்கு அமைச்சர் முத்துசாமி மற்றும் தருமபுரிக்கு அமைச்சர் ராஜேந்திரன் சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேற்று முதல் இன்று வரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமான மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு அவசரகால உதவி எண்களை, பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச உதவி எண்கள் வெளியிடபட்டுள்ளது. இந்த பாதிப்பில் உள்ள மக்களின் உறவினர்கள் தொடர்பு கொண்டு பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று(டிச 2) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் தேசிய சுகாதாரத் திட்ட மருத்துவ தொழில் நுட்ப வல்லுநர்களைக் கொண்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு 93.62 சதவீதம் மதிப்பெண்களுடன் தேசிய தரச்சான்றிதழ் வழங்கி பாராட்டியது. தரச் சான்றிதழ் கிடைக்க சிறப்பாக பணியாற்றிய கல்லூரி முதல்வா்,மருத்துவா்கள் உள்ளிட்ட அனைவரையும் மாவட்ட ஆட்சியர் சரயு பாராட்டினார்.
போச்சம்பள்ளி வட்டம், புலியூரில் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஓசூர் மற்றும் வேளாங்கண்ணி பள்ளிக் குழுமம் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் இன்று டிசம்பர் 1 நடைபெற இருந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக வரும் டிசம்பர் 8 ஞாயிறு அன்று நடைபெறும் என்று தேதி மாற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி என்றாலே மாங்கனி நகரம் என்று பெயர் உண்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மா விவசாயிகள் தண்ணீர் பாயும் நிலங்களுக்கு கல்தார் என்ற மருந்து வைத்து மாங்கனி அறுவடை செய்வது உண்டு. இந்த முறையை பயன்படுத்தி விவசாயிகள் நிறைய தோட்டங்களுக்கு மருந்துகள் உபயோகித்து மாங்கனிகள் அதிகரித்து மா விலைச்சல் அதிகமாக விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழக முழுவதும் தொடர் மழை பெய்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்செட்டி அடுத்த கடுகு நத்தம் மலைப்பகுதியில் தசரதன் மற்றும் அவரது மனைவி முனியம்மா ஆகியோர் நேற்று ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது புதரில் மறைந்திருந்த சிறுத்தை செம்மறி ஆடு ஒன்றை தாக்கி அதன் கழுத்து பகுதியை கடித்தது. இருவரும் சத்தம் போடவே சிறுத்தை அங்கிருந்து ஓடியது. மீட்கப்பட்ட ஆட்டுக்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.