Krishnagiri

News November 1, 2024

சொத்து தகராறில் இருவர் படுகொலை; தம்பி வெறிச்செயல்

image

ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி அருகேயுள்ள மோட்டூர் பகுதியில் குடும்பத்தகராறில் மாரிமுத்து (37) மற்றும் மனைவி ருக்மணி (32) ஆகியோர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். கணவனின் தம்பி முருகன் குடிபோதையில் வெறிச்செயல் புரிந்ததாக கூறப்படுகிறது.  கொலை செய்த முருகனை தீவிர தேடுதலுக்கு பிறகு சாமல்பட்டி போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News October 31, 2024

வெடி விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை

image

பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம்.

News October 31, 2024

மு.தம்பிதுரைக்கு அதிமுகவினர் வாழ்த்து

image

நாடாளுமன்ற இரு அவைகளின் நிலைக் குழு தலைவராக மாநிலங்களவை உறுப்பினருமான மு. தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாலகிருஷ்ண ரெட்டி, முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், மாவட்ட மாணவரணி செயலாளர் வெற்றிச்செல்வன், மாதையன், தூயமணி, பிரபாகரன் உள்பட அதிமுக நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

News October 31, 2024

கிருஷ்ணகிரி மக்களே பாதுகாப்பாக கொண்டாடுங்க

image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட கிருஷ்ணகிரி மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்.

News October 29, 2024

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 29.10.2024 இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 29, 2024

சூளகிரி அருகே இளைஞரிடம் கஞ்சா பறிமுதல்

image

சூளகிரியை அடுத்த அட்டகுறுக்கி கிராமத்தில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி  நடத்தப்பட்ட சோதனையில், அதே கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் ( 23 ) என்பவர் சுமார் 60 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையெடுத்து இளைஞரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

News October 29, 2024

தேன்கனிக்கோட்டையில் காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மரக்கட்டா வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் பல்வேறு குழுக்களாக காட்டு யானைகள் சுற்றி திரிந்து ராகி, நெல் உள்ளிட்ட விவசாய விளை பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் கிராம பொதுமக்கள், விவசாயிகள் அச்சத்துடன் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், அந்த காட்டு யானைகளை அடர்ந்த ஜவளகிரி வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News October 29, 2024

ஆவினில் 3 கோடி ரூபாய்க்கு தீபாவளி விற்பனை இலக்கு

image

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்துக்கு உட்பட்ட 226 பால் விற்பனை நிலையங்களில் சிறப்பு மைசூர் பாகு, நெய் அல்வா, பால்கேக், பால்கோவா, நெய் மிக்சர் என 22 ஆயிரம் கிலோ இனிப்பு வகைகள், 10 டன் நெய் என மொத்தம் ரூ. 3 கோடிக்கு தீபாவளிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஆவின் இனிப்பு பொருள்களை வாங்கி பயன்பெறலாம் என்று ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

News October 29, 2024

ஒசூரில் 7 பட்டாசு குடோன்களுக்கு ‘சீல்’

image

ஒசூா் அருகே பேகேப்பள்ளி பகுதியில் சந்திரசேகா் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் 8 பட்டாசு கடைகள் போடப்பட்டுள்ளன. இதில் ஒரு கடைக்கு மட்டும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்தது வருவாய்த் துறையினா் சோதனை செய்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை கடையில் அடுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது. போலீசார் குடோன்களுக்கு ‘சீல்’ வைத்தனர்.

News October 28, 2024

இரவு ரோந்து பணியில் காவல் அதிகாரிகள்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.