India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசின் சிறுதானிய இயக்கத்தின் கீழ், விவசாயிகள் தங்கள் தரிசு நிலங்களை உழுவதற்கு 40% வரை மானியம் பெறலாம். விவசாயிகள் தங்கள் ஆதார், நிலச்சான்று, வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையில் விண்ணப்பித்து இந்தத் திட்டத்தின் பயன்களைப் பெறலாம். வரும் 2028 ஆம் ஆண்டு வரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளனர். ஷேர் பண்ணுங்க.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழை காலங்களில் வயல்வெளிகளில் உள்ள ‘பம்ப் செட்’டுகளை இயக்க செல்லும் போது பாம்பு திண்டல் மற்றும் விஷப் பூச்சிக்கடிக்கு உள்ளாக வேண்டியுள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை மூலம் கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி ‘பம்ப் செட்’ கட்டுப்படுத்தும் கருவி மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 2 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வா் சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்ததையடுத்து, இந்திய விமான நிலைய ஆணையம் ஒசூரை சுற்றி 5 இடங்களில் முன்மொழியப்பட்ட விமான நிலையத்துக்கான இடங்களை பரிசீலனை செய்தது.அதில் தனேஜா ஏரோஸ்பேஸ் நிறுவனம் அருகில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கோபிநாத் எம்பி தெரிவித்தார்.
உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.
ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். இந்த புகார்களில் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (நவ 23) மற்றும் நாளை (நவ 24) ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் அட்டையில் திருத்தம், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கலாம். மேலும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டமும் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெறவும்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விவசாயிகள் தங்களது பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். அதிகாரிகள் உடனடியாக பதிலளித்து, தீர்வு காண உறுதி அளித்தனர். வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கா்நாடக மாநில எல்லைப் பகுதியில் உள்ள பல்லூஜா கிராமத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து உடலை கைப்பற்றிய அத்திப்பள்ளி போலீசார், பிரேத பரிசோதனைக்காக அத்திப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்தவர் சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சியை சேர்ந்த அழகுராஜ் என தெரிய வந்துள்ளது.மேலும், இரு மாநில போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு நேற்று ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற அரசின் திட்டத்தின் கீழ் மத்தூர் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களின் பாடப் படிப்புகள் மற்றும் விடுதியின் அடிப்படை வசதிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். மேலும், அரசு திட்டங்கள் சரியாக செயல்படுவதை மாணவர்களிடம் கேட்டு உறுதி செய்தார்.
Sorry, no posts matched your criteria.