India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடக்கிறதா என போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஊத்தங்கரை, கந்திகுப்பம், பர்கூர், கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, ஓசூர், சூளகிரி, பாகலூர், பேரிகை, மத்திகிரி, நல்லூர், கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1,300 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் கலை பண்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் நவ 17 ஆம் தேதி மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பரதநாட்டியம், ஓவியம் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெறுகின்றன. பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் விவரங்களுக்கு சேலம் மண்டலக் கலைப்பண்பாட்டு மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுகவின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய தொகுதிகளை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டமாகவும், ஓசூர், வேப்பனப்பள்ளி, தளி ஆகிய தொகுதிகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டமாகவும் திருத்தி அமைக்கப்பட்டு அதன்படி செயல்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அளித்துள்ளதையடுத்து நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் அசோக்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஓசூர் கிட்டப்பாகுட்டையை சேர்ந்த அஸ்லாம்(38). இவரின் மனைவி நஸ்ரினுடன் அயானு(7) மற்றும் ஒரு வயதான அப்துல்லா என்ற இரு மகன்களுடன் ஓசூர் டி மார்ட் அருகே நேற்றிரவு 7.45 மணி அளவில் சாலையை கடந்தபோது அவ்வழியாக வந்த லாரி, அவர்கள் மீது மோதியதில் நஸ்ரின் அயானு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐந்து காவல் உட்கோட்டங்களிலும் இன்று இரவு ரோந்து செல்லும் காவல்துறை துணை கண்காணிப்பார்கள் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் குறித்த விபரங்கள் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கட்டுப்பட்டு அறை தொலைபேசி எண் 04343230100 க்கு இரவு நேரத்தில் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் படை வீரர்கள் மற்றும் அதனை சார்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் குறைபாடுகள் தொடர்பான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள எஸ் வி வி மஹாலில் வருகின்ற 6:11/2024 தேதியில் நடைபெறும் என்றும் இதனை முன்னாள் படை வீரர்கள்/விதவையர்கள் பயன்படுத்தி ஓய்வூதிய குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரயு கேட்டுக் கொண்டுள்ளார்.
சூரிய சக்தியை பயன்படுத்தி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும், பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சார திட்டம், கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி, அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், வங்கிகள் மூலம் உடனடியாக கடன் பெறலாம். இதற்கு www.solarrooftop.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாளை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி,சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், காலையிலே எண்ணேய் தேய்த்து குளித்தும், பலகாரங்கள் செய்து அதை உற்றார் உறவினர்களுக்கு கொடுத்தும், அறுசுவை உணவு சாப்பிட்டும், புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும், திரையரங்குகளில் பலர் புதுப்படங்களை கண்டு ரசித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். இதில், உங்களை மகிழ்வித்தது எது? COMMENT பண்ணுங்க.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள நான்கு கோவில்களில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை நேற்றிரவு மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். உலகம் பாரத கோவில் மற்றும் கூலியம் கிராமத்தில் மூன்று அம்மன் கோவில்களில் மர்மநபர்கள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் உண்டியலில் இருந்து திருடியுள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் சூளகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.