Krishnagiri

News January 27, 2025

விடுமுறை அளிக்காத 75 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தினத்தன்று 31 கடைகள், 49 உணவு நிறுவனங்கள் மற்றும் 7 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 87 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சட்ட விதிமுறைகளை பின்பற்றாத 25 கடைகள், 46 உணவு நிறுவனங்கள் மற்றும் 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 75 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டது.

News January 27, 2025

பர்கூர் அருகே இரு லாரிகள் மோதல் நான்கு பேர் பலி

image

பர்கூர் அருகே நேற்று(ஜன.26) நடந்த கோர விபத்தில் இரு லாரி டிரைவர்கள் உட்பட நான்கு பேரும், 34 எருமை மாடுகளும் பலியாகின. கிருஷ்ணகிரி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அத்திமரத்துப்பள்ளம் பகுதியில் நேற்று காலை லாரி வந்த போது டிரைவர் நாராயணன் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆறுவழிச் சாலையில் எதிர் திசையில் பாய்ந்து விபத்தை ஏற்படுத்தியது.

News January 26, 2025

கிருஷ்ணகிரி ஹைவேயில் மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டன

image

கிருஷ்ணகிரி ஹைவேயில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு வந்த ஈச்சரும் சரக்கு லாரியும் மற்றும் ஒரு குட்டி யானையும் மூன்றும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன, இதில் மூவர் இறந்ததாக சொல்லப்படுகிறது. ஈச்சர் வாகனத்தை ஓட்டி வந்தவர் தூக்க கலக்கத்தில் எதிரே உள்ள சாலையில் வாகனத்தை திருப்பியதால் அந்தப் பக்கம் வந்து கொண்டிருந்த குட்டி யானையும் லாரியும் மோதியது.

News January 25, 2025

உங்கள் ஊர் செய்தி வே2நியூஸ் மூலம் சென்றடைய

image

நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? இங்கே <>க்ளிக்<<>> பண்ணுங்க

News January 25, 2025

ஸ்டிரைக் அறிவித்த லாரி ஓனர்கள்

image

ஓசூர் மற்றும் கர்நாடகா ஆனெக்கல் பகுதியில் ஜல்லி கற்களின் விலையை கிரஷர் உரிமையாளர்கள் ஒரு டன்னுக்கு ரூ.199 உயர்த்தியதால் சுமார் 3000 லாரி ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது. பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் வரும் திங்கள்கிழமை முதல் ஓசூர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக தென்னிந்திய மோட்டார் போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் சண்முகப்பா தெரிவித்தார்.

News January 25, 2025

மூளையில் இருந்த கட்டியை அகற்றி சாதனை

image

நாட்ராம்பள்ளியை சேர்ந்தவர் காயத்ரி. பல நாட்களாக தீராத தலை வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர் கிருஷ்ணகிரி பி.எஸ்.வி. மருத்துவ–மனையை அணுகி சோதனை செய்த போது மூளையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர் ஜெயக்குமார் தலைமையில் டாக்டர் பிரபு, செவிலியர்கள் விமலி, பிரபாவதி மற்றும் மருத்துவக்குழுவினர், அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து மூளையில் இருந்த கட்டியை அகற்றி சாதனை படைத்தனர்.

News January 25, 2025

ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வரும் 26ம் தேதி குடியரசு தினத்தையொட்டி, ஊராட்சி தலைவர்கள் தலைமையில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்படும். மேலும், ஒப்புதல் தீர்மானங்களும் கொண்டு வரப்படும். இதனால் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News January 24, 2025

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டயப்படிப்பு படித்தவர்கள் என அனைத்து வித கல்வித்தகுதியினரும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளது .

News January 24, 2025

மேல்கோட்டை அருகே மனைவியை வெட்டிவிட்டு கணவன் தற்கொலை

image

தேன்கனிக்கோட்டை மேல்கோட்டை பகுதியில் வசித்து வந்தவர் ராமசாமி (வயது 55). இவரது மனைவி முனியம்மாள் (40). இந்நிலையில், முனியம்மாளின் நடத்தையில் சந்தேகப்பட்டு ராமசாமி நேற்று காலை அரிவாளால் மனைவி முனியம்மாளை சரமாரியாக வெட்டினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசுக்கு பயந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

News January 23, 2025

பர்கூரில் லஞ்சம் பெற்ற இருவர் கைது

image

கிருஷ்ணகிரி மலையாண்டஹள்ளி புதூர் கிராமத்தில் நாகராஜ் என்பவரது நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்க பர்கூர் தாலுக்கா சார்பு நில அளவை ஆய்வாளர் குமரன் இடைத்தரகர் சுஹேல் மூலம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். நாகராஜ் ரூ.9,000 லஞ்சம் இடைத்தரகரிடம் கொடுத்துள்ளார். ஆய்வாளர் குமரன் இடம் பணத்தை சுஹேல கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் குமரன் மற்றும் இடைத்தரகர் இருவரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!