Krishnagiri

News December 4, 2024

கிருஷ்ணகிரியில் இரவு நேரத்தில் வீட்டின் மீது விழுந்த பாறை

image

கிருஷ்ணகிரி அதிமுக முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் வெங்கடாசலம் வீட்டின் நேற்று(டிச 4) இரவு கருமலையிலிருந்து ராட்சத பாறை சரிந்து வீட்டின் மேல் விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த அசம்பவிதமும் நடைபெறவில்லை. இதனை அறிந்த வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி  இன்று  காலை நேரில் சென்று பார்வையிட்டார்.

News December 4, 2024

கனமழையால் 153 வீடுகள் சேதம்; 31 ஆடு, மாடுகள் பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த போட்ட கனமழையால் சேத மதிப்பு குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகிறார்கள். அதன்படி 26 குடிசை, ஒட்டு வீடுகள் முழுமையாகவும், 127 வீடுகள் சேதம் என மொத்தம் 153 வீடுகள் சேதமாகியுள்ளது. மேலும், இது தவிர 31 ஆடு, மாடுகள், கோழிப்பண்ணைகளில் இருந்த 15 ஆயிரம் கோழிகள் உயிரிழந்துள்ளது. மேலும் பல ஆடு, மாடுகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெவித்தனர்.

News December 4, 2024

துணை முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து

image

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு டிசம்பர் 5-ஆம் தேதி துணை முதல்வர் வருவதாக இருந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசு அலுவலா்கள் தெரிவித்தனா்.

News December 3, 2024

அமைச்சரை நிறுத்தி அழைத்துச் சென்ற ஊராட்சி தலைவர்

image

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புளியம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த மக்களை எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் சந்திக்கவில்லை என ஆதங்கம் கொண்ட புளியம்பட்டி ஊராட்சி தலைவர் ரங்கநாதன் போச்சம்பள்ளி பகுதியை பார்வையிட வந்த அமைச்சர் முத்துசாமியை இந்திராபுரி கிராமத்தில் வழியில் நிறுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அமைச்சர் பார்வையிட்டார்.

News December 3, 2024

பொதுமக்களின் வசதிக்காக அவசரகால தொடர்பு எண்கள் வெளியீடு

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 1077, மற்றும் 04343-234 444 என்ற எண்களிலும், கிருஷ்ணகிரி வட்டார மக்கள் 04343 – 236050,பா்கூா் 04343 – 266164, ஊத்தங்கரை 04341 – 220028, போச்சம்பள்ளி 04341 – 252370,சூளகிரி 04344 – 292098, 252998,ஒசூா் 04344-222493,தேன்கனிக்கோட்டை 04347- 235041 அஞ்செட்டி 04347- 236411 என்ற எண்களில் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 3, 2024

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

image

ஃபென்ஜால் புயலால் பெய்த கனமழையால் வடதமிழகத்தில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டாரங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நீடிக்க வாய்ப்புள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுத்தப்பட்டுள்ளது. சாலைகள், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கவும் வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க

News December 2, 2024

ஊத்தங்கரையில் பாதிப்புகளை பார்வையிட்ட இபிஎஸ்

image

ஊத்தங்கரையில் பகுதியில் வரலாறு காணாத வகையில் பெய்த பலத்த மழையால், பலத்த பாதிப்புகள் ஏற்பட்டது. இதனை, இன்று டிசம்பர் 02, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

News December 2, 2024

கிருஷ்ணகிரி: 2 தாலுகாவுக்கு மட்டும் விடுமுறை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாவைச் சேர்ந்த பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிசம்பர் 03) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஊந்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி தாலுகாவைச் சேர்ந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

News December 2, 2024

கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு தொடர்பான உதவிகளுக்கு மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் சார்பில் பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 அழைத்து பொதுமக்கள் உதவிகள் பெறலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார்.

News December 2, 2024

கிருஷ்ணகிரிக்கு விரையும் அமைச்சர் முத்துசாமி

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. எனவே, இது குறித்து தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், கிருஷ்ணகிரிக்கு அமைச்சர் முத்துசாமி மற்றும் தருமபுரிக்கு அமைச்சர் ராஜேந்திரன் சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!