Krishnagiri

News December 6, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சசிகலா வருகை ஒத்திவைப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளில் அதிக அளவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட இன்று (06) சசிகலா வருகை தர இருந்தார். இந்நிலையில் நிகழ்ச்சியில் மாற்றம் ஏற்பட்ட காரணத்தால் இன்று வருகை தர இருந்த நிகழ்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

News December 6, 2024

கிருஷ்ணகிரி மக்களுக்கு அமைச்சர் தகவல்

image

கிருஷ்ணகிரியில் திமுக நிர்வாகிகளின் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழக வேளாண்துறை அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம், புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் மழையால் 3 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி பயிர்கள் நீரால் சூழ்ந்துள்ளதாகவும் கணக்கெடுப்பு பணிகள் முடிவில் நிவாரணம் குறித்து முதல்வர் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.

News December 6, 2024

கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற கொலையில் கோர்ட் தீர்ப்பு 

image

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாபு (38) இவரது மனைவி சுதாவுக்கும், வெங்கடாஜலபதி என்பவருக்கும் இருந்துவந்த தகாத உறவை பாபு கண்டித்துள்ளார். இருவரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து பாபுவை 2013ல் கொன்றனர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுதா(41),வெங்கடாஜலபதி (45),முனியப்பன் (45) ஆகிய மூவருக்கும் ஓசூர் நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது

News December 5, 2024

ஊராட்சி செயலாளர் தற்காலிக பணி நீக்கம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் மலையாண்டள்ளி ஊராட்சி வேங்கை நகரில் மாவட்ட ஆட்சியர் சரயு குடிநீரில் உள்ள குளோரின் அளவை ஆய்வு செய்தார். அப்போது குடிநீரில் குளோரின் அளவு குறித்து முறையாக பதிலளிக்காத ஊராட்சி செயலாளர் சின்னசாமி என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  உடன் அரசு அதிகாரிகள் பலர் உள்ளனர்.

News December 5, 2024

சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம்

image

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் கடலூர், தி.மலை மற்றும் தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் சிறு வணிகர்களுக்கு சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம் நாளை முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறுவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிறு வணிகர்களுக்கு உதவிக்கரம் நீட்டவே இந்த முகாம் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 5, 2024

முதல்வர் மருந்தகம்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள

image

B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (டிச.5) கடைசி நாள் என்பதால், விருப்பமுள்ள தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மானியமாக ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.

News December 5, 2024

கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு

image

ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட ஊத்தங்கரை, போச்சம்பள்ளி ஆகிய வட்டாரங்களில் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகாம்கள் 05.12.2024 முதல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தெரிவித்துள்ளார். ஊத்தங்கரை வட்டத்தில் காமராஜ் நகர், அண்ணா நகர், நேரு நகர், கொல்லப்பட்டி, ஜீவா நகர், சிங்காரப்பேட்டை எம்.ஜி.ஆர். நகர், திருவனப்பட்டி, கல்லாவி மற்றும் கெங்கிநாயக்கன்பட்டி ஆகிய 9 இடங்களில் நடைபெறுகிறது.

News December 4, 2024

அரையாண்டு தேர்வு குறித்து அமைச்சர் தகவல்

image

தமிழகம் முழுவதும் டிசம்பர் 9ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில் பெஞ்சல் புயல் மழை காரணமாக கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெள்ளம் பாதித்த 15 மாவட்ட கல்வி அலுவர்களுடன் நேற்று ஆலோசனை செய்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளில் அரையாண்டு தேர்வு எழுத முடியாத சூழல் இருந்தால், அந்த தேர்வுகள் ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் இன்று(டிசம்பர் 4) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இழப்பீடு கோரும் விவசாயிகள் அவரவர் சம்பந்தப்பட்ட வேளாண்மை அலுவலரை சந்தித்து இழப்பீடு குறித்து மனு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News December 4, 2024

தேசிய சுகாதார துறையின் சான்றிதழ் பெற்ற அரசு மருத்துவக் கல்லூரி

image

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல சேவை வழங்குவதில் தமிழ்நாடு அளவில் 93.62% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்து தேசிய சுகாதார அமைப்பின் சான்றிதழை பெற்று சாதனை படைத்துள்ளது .தமிழகத்தில் குழந்தைகள் நல சேவை வழங்குவதில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதலிடம் பெற்றதற்கு, மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு பாராட்டினார்.

error: Content is protected !!