India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போச்சம்பள்ளி அருகே உள்ள தட்டரஹள்ளி கிராமத்தில் ஒரு பெண்ணுடன் மாந்தோப்பில் பேசிக் கொண்டிருந்த வாலிபரை ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் கத்தியால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை நாகரசம்பட்டி போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், அவர், காவேரிப்பட்டினம் அடுத்த கருக்கன்சாவடி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தை பற்றியோ, அவரது பெயர், முகவரி, நிழற்படம், குடும்ப விபரங்கள், பள்ளி அக்கம்பக்கத்தார் அல்லது குழந்தையின் அடையாளத்தினை வெளிப்படுத்தக்கூடிய ஏதேனும் பிற விபரங்கள் ஊடகம் அல்லது சமூக வலைதளங்களில் வெளியிட்டால் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டப்பிரிவு 23 கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் இன்று உறுதிமொழி ஏற்றனர். பின்னர், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் தொடக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகாக்களிலும் நாளை பொதுவிநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் வழங்குவதன் பொருட்டு மாதந்தோறும் நடைபெறும் வட்ட அளவிலான குறைத்தீர் முகாம் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சிறப்பு முகாம் 8.2.2025 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தலைமையில் ஏற்கப்பட்டது. இதில், மாவட்ட காவல் காண்காணிப்பாளர் தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களும் இருந்தனர்.
ராயக்கோட்டை அருகே கரிடிகுட்டை எனும் இடத்தில் இன்று காலை 3.30 மேல் ஓசூரில் இருந்து தருமபுரி நெடுஞ்சாலையில், பால் ஏற்றி வந்த 14 சக்கர கனரக வாகனங்கள் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நீலகிரி சேர்ந்த ஓட்டுநர்கள் ராஜேஷ்குமார் மற்றும் அருண் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் மினிபேருந்து புதிய விரிவான திட்டத்தின் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்களை அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் உடனடியாக சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் உள்ள இந்தியன் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பாக செல்போன் பழுது நீக்கும் பயிற்சி தொடங்க உள்ளது. இதில் பயிற்சி பெற விரும்புவோர் 11-2-25 தேதிக்குள் விண்ணப்பிக்கவும். பயிற்சியில் சேரும் அனைவருக்கும் சீருடை, காலை மதிய உணவு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் :9442247921, 9080676557. ஷேர் பண்ணுங்க.
போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த 3 ஆசிரியர்களான சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (பிப்ரவரி 6) கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டத்தில் அந்த ஆசிரியர்களுக்காக எந்த வழக்கினர்களும் ஆஜராவதில்லை என முடிவெடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.