India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.அவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 16 லட்சம் பேர்.மாவட்டம் முழுவதும் 12 சுகாதார தொகுதிகள் உள்ளன.அதில் ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் 45 ஆயிரத்து 988 பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.போதிய தூக்கமின்மை, இரவு நேரத்தில் பணி செய்வது போன்றவை காரணங்களாக உள்ளன என சுகாதார துறை தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ‘நிறைந்த மனம்’ நிகழ்ச்சியில், முதல்வர் திட்டத்தின் கீழ் மக்களிடமிருந்து பெற்ற மனுக்கள் குறித்து கலெக்டர் பேசினார். 96 முகாம்களில் 36,312 மனுக்கள் பெறப்பட்டதாக அவர் தெரிவித்தார். பரிசீலனை செய்து 24,099 மனுக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டது. இந்த முயற்சியில் அரசு சேவைகள் மக்களிடம் எளிதாகப் பெறப்படும் வகையில் வழங்கப்பட்டதாக கலெக்டர் கூறினார்.
கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் மாவட்ட வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு ராபி முன்னேற்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் ராபி பருவத்தில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடுபொருட்கள் 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத் நேற்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அண்மையில் நடைபெற்ற மக்களவை கூட்டத் தொடரில் அம்பேத்கர் குறித்து அவமரியாதையாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு நாடெங்கிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என கோபிநாத் எம்பி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களுக்கு மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. டிச 23, 24, 26 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பசுமைதாயகம் அமைப்பின் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி கலந்துகொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டத்தில் அதிகளவிலான கனிமவளங்கள் சுரண்டப்படுவதால் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அச்சுறுத்தல் இருப்பதாகவும், அரசு உடனடியாக அதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஓசூர் மத்தம் சர்க்கிள் பகுதியில் நேற்று மதியம் யானை தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் அங்கு சென்று அதிரடியாக சோதனை நடத்திய போது 4 பேர், ஒரு ஜோடி யானை தந்தங்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் அதை வைத்திருந்த வெங்கடேஷ் (27), விஜயகுமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.
சூளகிரி பேருந்துநிலையம் செல்லும் சாலையில் இன்று இருசக்கர வாகனத்தில் சென்ற சந்தோஷ் 17 என்ற +2 மாணவன் மீது டொம்போ மோதியதில் மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த வந்த சூளகிரி போலீசார், மாணவரின் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஒசூர் மாநகராட்சியில் ரூ. 582.54 கோடியில் புதைச் சாக்கடை திட்ட பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி தொடங்கி வைத்தனர். மேலும், 37 கழிவுநீர் உந்து நிலையங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட கழிவுநீர் சாந்தாபுரம் ஏரியில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்படுகிறது. ஒசூருக்கு மொத்தம் ரூ. 772.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், கால்வாய், ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மழையால் சேதமான கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மின்தடை, வனவிலங்குகள் சேதம் போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு கோரப்பட்டது. கலெக்டர் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார்.
Sorry, no posts matched your criteria.