Krishnagiri

News February 16, 2025

இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம் 

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சார்பில் இன்று 16.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ரோந்து பணியில் இடுபடுகின்றனர். இதில் தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஓசூர், மந்தகிரி, மகாராஜாகடை ஆகிய இடங்களில் இரவு ரோந்து பணி பணியில் இடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. 

News February 16, 2025

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை

image

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை <>மாத சம்பளம் வழங்கப்படும்<<>>. வரும் மார்ச் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News February 16, 2025

கிருஷ்ணகிரியில் போட்டோகிராபி வீடியோகிராபி இலவச பயிற்சி

image

கிருஷ்ணகிரி மாவட்ட இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பாக வருகின்ற பிப்ரவரி 19-ம் தேதி முதல் கேஆர்பி அணை பகுதியில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் 30 நாட்கள் இலவச போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி பயிற்சி வழங்கப்பட உள்ளது ஆர்வம் உள்ளவர்கள் நேரடியாக வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர் மேலும் தொடர்புக்கு – 94422 47921 தொடர்பு கொள்ளவும்.

News February 16, 2025

மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, பள்ளிக்கல்வித்துறையால் 2024-2025-ம் ஆண்டு மாநில அளவில் குடியரசு தின /பாரதியார் தின தேக்வாண்டோ மற்றும் குத்துசண்டை விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்று தங்கம், வெள்ளி மற்றும் வெங்கல பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் நேற்று (15) பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

News February 16, 2025

35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் கைது

image

ஒசூரில் வீட்டிற்கு மின்இணைப்பு வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிபொறியாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் சிப்காட் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், வீட்டிற்கு இணைப்பு வழங்க அஞ்செட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் வாரிய பொறியாளர் சிவகுரு மற்றும் வணிக ஆய்வாளர் பிரபாகரன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

News February 16, 2025

கிருஷ்ணகிரியில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்

image

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கோபிநாத் எம்.பி. தலைமை வகித்தார். கலெக்டர் தினேஷ் குமார் முன்னிலை வகித்தார். பல்வேறு துறைகள் தொடர்பான திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு, அவை பயனாளிகளுக்கு விரைவாகவும் தரமாகவும் சென்றடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபிநாத் எம்.பி. தெரிவித்தார்.

News February 15, 2025

காவல்துறை சார்பில் இன்று இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 15.02.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தென்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

News February 15, 2025

கஷ்டங்கள் தீர்க்கும் காட்டுவீர அஞ்சநேயர்…

image

தேவசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாளன்று மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவதால் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த நாட்களில் அனுமனை வழிபட்டு தேங்காய் கட்டினால் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்று பக்தர்களில் நம்பிகையாக உள்ளது.

News February 15, 2025

10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொந்தரவு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் 15 வயது மாணவன் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். அந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர் உசேன் என்பவர் மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று ஆசிரியர் உசேனை பிடித்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News February 15, 2025

தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை

image

தேன்கனிக்கோட்டை தாலுகா அந்தேவனப்பள்ளி பக்கமுள்ள காரண்டப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாஸ் (27). தொழிலாளி. குடும்ப பிரச்சினையால் அவரது மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதில் மனமுடைந்த சீனிவாஸ் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!