India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ரசாயன ஊசி செலுத்தி விற்பனை செய்யப்பட்ட 6 டன் தர்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர். ரசாயனம் கலந்த பழங்களை சாப்பிடுவது புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலக்கேடுகளை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தர்பூசணியில் ரசாயனம் கலந்துள்ளதா என்பதை மக்கள் கவனமாக சரிபார்த்து வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம். குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாத கொடிக் கம்பங்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய அறிவிப்புகள் அளித்து ,அதன் பிறகு அகற்ற வேண்டும். அகற்றுவதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களிடம் வசூலித்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணையை கட்ட மறுப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்து கன்னட அமைப்புக்கள் சார்பில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டது.ஓசூர் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற கன்னட அமைப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.
ஓசூரில் 12-ம் தேதி இரட்டைக் கொலையிலும், சூளகிரியில் 19-ம் தேதி மூதாட்டி கொலைக்கும் ஒரே சைக்கோ கொலையாளிகள் தொடர்புடையவர்கள் என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மூவரையும் கத்தியால் குத்தி கொன்ற பின்னர் வீடுகளுக்கு தீ வைத்து சென்றுள்ளனர். மூன்றும் புதன்கிழமைகளில் நிகழ்ந்ததால், போலீசார் இவர்களை ‘புதன்கிழமை கொலையாளிகள்’ எனக் குறிப்பிடுகின்றனர். விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் பருவமழைக் காலம் முடிந்த நிலையில், பல்வேறு பகுதிகளிலும் வெயில் வாட்டி வருகிறது. அவ்வபோது பெய்து வரும் மழையால் வெயில் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோவை,திருப்பூர்,தேனி,திண்டுக்கல், ஈரோடு,தென்காசி, கன்னியாக்குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
கிருஷ்ணகிரியில் கடந்த சில தினங்களாக, வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே நகரின் சில பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சில இடங்களில் நாளை (மார்ச்.22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை வெளியே செல்லும் போது குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை மறக்காம எடுத்துட்டு போங்க. ஷேர் பண்ணுங்க
ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன. 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். <
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், ஆட்சியர் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் நிலத்தகறாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ராஜேஷ் என்பவரை கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த தேவராஜ், மனோஜ் குமார், விஜயகுமார் ஆகிய மூன்று பேருக்கு ஓசூர் மாவட்ட அமர்வு கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 25,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
Sorry, no posts matched your criteria.