India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒசூா், சானசந்திரம், வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் மனோகா் (எலக்ட்ரீசியன்) கொலை வழக்கில் அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பரான ஹரிஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மனோகரும், ஹரிஸும் இருசக்கர வாகனத்தில் கசவகட்டாவுக்குச் சென்று மது அறுந்துபோது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஹரிஷ் கட்டையால் மனோகரைத் தாக்கியத்தில் மனோகா் உயிரிழந்தாா் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட புத்தக பேரவை மற்றும் அரசு அருங்காட்சியகம் இணைந்து நடத்தும தொல்லியல் பயிற்சி கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக வளாகத்தில் பிப்ரவரி 8, 9 தேதிகளில் நடைபெறுகிறது. ஓய்வு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு 80723 51338, 97875 36970 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
ஓசூர் அருகே சானசந்திரம் வ. உ. சி நகரை சேர்ந்த மனோகர் (25) எலக்ட்ரீசியன், நேற்று மாலை ஓசூர் கசவு கட்டா பகுதி மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே, தலையில் பலத்த காயத்துடன் இறந்துகிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேனிகனிக்கோட்டை பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகளால் உயிரிழப்பு மற்றும் விவசாய பயிர்கள் சேதம் ஏற்படுகிறது. இதனை கண்டுக் கொள்ளாத தமிழக அரசை கண்டித்து இன்று தேன்கனிக்கோட்டை காவல் நிலையம் அருகில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சாலையின் குருக்கே கழுதை வந்ததால் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த விசுவாசம்பட்டி சார்ந்த குப்பன் (55) மற்றும் கோவிந்தசாமி (80) இருவரும் அதன் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் கோவிந்தசாமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, பகுதியை சேர்த்தவர் பிரித்வி, (21) மர்மநபர் ஒருவர் உங்களுக்கு பொதுப்பணித் துறையில் டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி, 6.25 லட்சம் ரூபாயை இவரிடம் வாங்கி, சில நாட்களுக்கு முன், போலியான பணி நியமன உத்தரவை வழங்கியுள்ளார். அதை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்து சென்றபோது தான், இது போலி என தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரனை நடத்திவருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (01.02.2025) கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சி.தினேஷ்குமார்., இ.ஆ.ப சந்தித்து வாழ்த்து பெற்றார். இவர் விரைவில் கிருஷ்ணகிரி ஆட்சித்தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சாலைப் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறன் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன், மாகிட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) குமாள், சார் ஆட்சியர் பிரியங்கா இஆப., உள்ளிட்ட பலர் உள்ளனர்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 56-வது ஆண்டு நினைவு நாளை ஒட்டி அதிமுக சார்பில் பிப்ரவரி 3-ம் தேதி அந்தந்த பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் அதிமுக எம்எல்ஏ கே. அசோக் குமார் அவர்கள். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை இந்து முன்னணி சார்பாக திருப்பரங்குன்றம் மலைக்கு ஆதரவாக இந்து முன்னணி நடத்தும் மாபெரும் போராட்டத்திற்கு, ஜெர்மனி கோட்டை பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டிய இந்து முன்னணி நிர்வாகிகள் 10 பேரை தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.