Krishnagiri

News November 11, 2024

கிருஷ்ணகிரியில் 14,081 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 14 ஆயிரத்து 81 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் 1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்து 2021-ம் ஆண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். ரூ.3,025 கோடி மதிப்பில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டது.

News November 10, 2024

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் வரலாறு

image

தென்பெண்னை நீரை கரையோர விவசாய மக்கள் மட்டுமே ஏற்றம் முலம் எடுத்து விவசாயம் செய்தனர். மற்ற பகுதி மக்கள் நீரின்றி வறட்சியால் தவித்தனர். அதை மாற்ற அப்போதைய காவேரிப்பட்டணம் எம்.எல்.ஏ சு. நாகராஜ மணியகாரர் ஆற்றின் குறுக்கே அணை கட்ட அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதன்படி, முதல்வர் காமராஜர், ராஜாஜியின் ஆலோசனைப்படி அணை கட்ட சம்மத்தித்தார். அணை கட்டும் பணி 1955ல் தொடங்கி 1957 நவ 10 ஆம் தேதி திறக்கப்பட்டது.

News November 10, 2024

 ரூ 1 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடக்கம்

image

பாகலூரில் ரூ.1 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சரயு, ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினர் பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் எல்லோரா மணி, முன்னாள் பாகலூர் ஊராட்சி மன்றத் தலைவர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News November 9, 2024

15 வீடுகளை இடித்து அகற்றிய வருவாய்த்துறையினர் 

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை சாலையில் வாக்கில் உள்ளே அவுட் பகுதிக்கு செல்லும் இடத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக சிலர் வாடகைக்கு பயன்படும் வகையில் வீடுகளை கட்டி வருவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு கட்டப்பட்டிருந்த 15 வீடுகளை வருவாய்த்துறையினர் ஜேசிபி வாகனங்கள் உதவியுடன் இடித்து அகற்றினர். அப்போது ஓசூர் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

News November 8, 2024

நாளை குடும்ப அட்டை திருத்தல் முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை 9.11.2024 காலை பத்து மணி முதல் ஒரு மணி வரை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களிடம் தங்களது ரேஷன் அட்டையில் பெயர் நீக்கல், சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டான கோரிக்கைகள் சம்பந்தமாக மனு அளித்து தங்களது கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News November 8, 2024

கிருஷ்ணகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நவ 9ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. முகாமில் 8 ஆம் வகுப்பு மற்றும் அதற்குமேல் கல்வி பயின்ற மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, தனித்துவம் மிக்க அடையாள அட்டை, ஆதாா் அட்டை, கல்விச் சான்றுகள், புகைப்படம், சுய விவரம் ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

 முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் முதல்வர் மருந்தகம் அமைக்கலாம் இதற்கு www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம்  நவம்பர் 20வரை  விண்ணப்பிக்கலாம். இதில்,  ரூ.1.50 லட்சம் மதிப்பிற்கு மருந்துகளாகவும் விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

News November 8, 2024

கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கவனத்திற்கு 

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் பொருட்டு, நவம்பர் 9ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஊத்தங்கரை, அஞ்செட்டி, ஓசூர், சூளகிரி உள்ளிட்ட 8 வட்டங்களில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் குடும்ப அட்டை தொடர்பான பிரச்சனைகள், பொது விநியோக திட்டம் தொடர்பான குறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மக்கள் நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம்.

News November 8, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை வேலை நாள் 

image

தமிழ்நாடு அரசு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 01.11.2024 அன்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளித்தது. தீபாவளி பண்டிகை 31.10.2024 அன்று கொண்டாடப்பட்டதால், அரசு ஊழியர்கள் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 அன்று பணி நாளாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 7, 2024

பள்ளத்தில் கவிழ்ந்த இருசக்கர வாகனம்; 3 பேர் பலி  

image

ஒசூர் அடுத்த மாயநாக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நாகராஜ்(48) – ரத்னம்மா(37) தம்பதி மற்றும் அவரின் மகன் நவீன்(10) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் தளி-  கனகபுரா சாலை அடர்வனப்பகுதியான ஆன்னேமார்தொட்டி என்னும் வளைவு பகுதியில் நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து பாறையில் மீது விழுந்ததில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குடும்பமே விபத்தில் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.