India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் மினிபேருந்து புதிய விரிவான திட்டத்தின் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்களை அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் உடனடியாக சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் உள்ள இந்தியன் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பாக செல்போன் பழுது நீக்கும் பயிற்சி தொடங்க உள்ளது. இதில் பயிற்சி பெற விரும்புவோர் 11-2-25 தேதிக்குள் விண்ணப்பிக்கவும். பயிற்சியில் சேரும் அனைவருக்கும் சீருடை, காலை மதிய உணவு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் :9442247921, 9080676557. ஷேர் பண்ணுங்க.
போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த 3 ஆசிரியர்களான சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (பிப்ரவரி 6) கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டத்தில் அந்த ஆசிரியர்களுக்காக எந்த வழக்கினர்களும் ஆஜராவதில்லை என முடிவெடுத்துள்ளனர்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளம் ரூ.50,000 முதல் – ரூ.1,80,000 வரை வழங்கப்படும். வரும் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். <
உத்தனப்பள்ளி அருகே கொமேப்பள்ளியை சேர்ந்த்சவ்ஸ்ர் ராஜேஷ் நாதேஸ்வர கலைஞர், இவருக்கும் மதுரையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதற்கிடையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, அந்த பெண் இவரிடம் பேசுவதை நிறுத்தவே, மனம் உடைந்த ராஜேஷ் வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ராயக்கோட்டை வனச்சரகம், ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில், 20க்கும் மேற்பட்ட யானைகள், 3 குழுக்களாக முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து, 3 குழுக்களாக, 20க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேறி, பாவாடரப்பட்டி கிராம விவசாய நிலங்களுக்குள் புகுந்து, ஒரு ஏக்கர் நெல் பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ச.தினேஷ் குமார் 2017ல் ஐஏஎஸ் முடித்து, மத்திய நிதி அமைச்சகம், தேனி, சிவகாசி, திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களில் பணியாற்றினார். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 14வது கலெக்டராக பொறுப்பேற்றார். அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அலுவலகம் வருகையின் போது, நுழைவாயிலில் படிக்கட்டை தொட்டு வணங்கி உள்ளே சென்றார்.
போச்சம்பள்ளி அருகே பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக 3 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசு பள்ளியில் 8 வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம் , பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.தற்போது பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும்.<
Sorry, no posts matched your criteria.