India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருநங்கை/ திருநம்பி/ இடைப்பாலின நபர்களுக்கான குறைகளை நிவர்த்தி செய்திட ஏதுவாக, குறை தீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பிப்.14 அன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11.00 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது. குறைதீர்க்கும் முகாமில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கை / திருநம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்காரப்பேட்டை போலீசார் அப்பகுதியில் வேகமாக சென்ற வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, பழம் ஏற்றி வந்த அந்த வாகனத்தில் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான 30 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டனர். உடனே அந்த குட்காவை பறிமுதல் செய்ததுடன் அதில் இருந்த பெங்களூருவை சேர்ந்த அப்பு (வயது 32), கள்ளக்குறிச்சியை சேர்ந்த விஜய் (30) ஆகிய 2 பேரை சிங்காரபேட்டை போலீசார் கைது செய்தனர்.
இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 RRB Group D 2025 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். 18- 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000 (அடிப்படை) சம்பளம் வழங்கப்படவுள்ளது. https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
ராயக்கோட்டை அருகே தெருநாய் கடித்ததில் 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 5 நாட்களுக்கு முன்னர் பள்ளிக்கு செல்லும்போது நாய் கடித்ததை, வீட்டில் தெரிவிக்காமல் இருந்துள்ளார். திடீரென மூச்சுத்திணறல் ஏற்படவே மருத்துவமனை அழைத்துச் சென்றபோது, இதை கூறியுள்ளார். உயர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஆம்புலன்சில் சிறுவனின் உயிர் பிரிந்தது.
ரகசிய கேமரா விவகாரத்தில் கிருஷ்ணகிரி நகர செயலாளர் அடிப்படை உறுப்பினரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு என 2 ஆக பிரிக்கப்பட்டு 2 நகரங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி கிழக்கு நகர பொறுப்பாளராக எம்.வேலுமணியும், மேற்கு நகர பொறுப்பாளராக அஸ்லம் ரகுமான் ஷெரீப்பும் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் ரகசிய கேமரா வைத்து கண்காணித்த விவகாரதில், தி.மு.க., நகர செயலாளரும், நகராட்சி தலைவரின் கணவருமான நவாப் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கமிஷனர் அறைக்குள் கடந்த ஜன.29ல் நுழையும் போது, அங்கிருந்த டிஜிட்டல் கடிகாரத்தில், ‘பீப்’ சத்தம் கேட்டது. இதையடுத்து, ஊழியர்கள் கடிகாரத்தை கழற்றி பார்த்தபோது உள்ளே ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரிந்தது.
மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள். இன்ஜினியரிங் டிரைய்னி – ரூ.50,000 – ரூ.1,60,000, மேற்பார்வையாளர் டிரைய்னி ரூ.32,000 – ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.<
கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து. திங்கள் கிழமை பள்ளி மாணவர்கள் அணைவருக்கும் மன நல ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
பள்ளியில் கண்காணிப்பு கேமரா, கூடுதல் கழிவறை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர்கல்வி வரை அனைத்து செலவுகளையும் அரசு ஏற்க வேண்டும், அரசு வேலைக்கு உத்திரவாதம் வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரணம் வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடப்பட்டது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு, 30 நாட்கள் மொபைல் போன் பழுது நீக்குவதற்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு, 8ஆம் வகுப்பு படித்த,18 – 45 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் வரும் 12ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு 94422 47921, 90806 76557 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஒகேனக்கலில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தின் கீழ், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இயல்பு நீரேற்று நிலையத்தில், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்ட செயல்பாடுகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தனர்.
Sorry, no posts matched your criteria.