India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எலுமிச்சங்கிரியை சேர்ந்தவர் சிவகுமார். இவர், தன், 5 வயது உறவுக்கார சிறுவன் பரத்துடன் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் சென்றார். குப்பம் சாலையில் சென்ற போது எதிரில் வேகமாக வந்த லாரி மோதியதில் சிவகுமார் இறந்தார். படுகாயம் அடைந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து மகராஜகடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை மண்டல கடவுச் சீட்டு அலுவலகம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (பிப்.14) முதல் 2 வாரங்களுக்கு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒவ்வொரு மாற்று நாள்களிலும் கடவுச் சீட்டு முகாமை நடத்தவுள்ளது. இந்த முகாமில் பங்கேற்க விரும்புகிறவர்கள் https:///www.passportindia.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஆட்சியர் ச.தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு தனியார் ஆசிரியர் மன்றம் மற்றும் வேளாங்கண்ணி குரூப் ஆப் ஸ்கூல் இணைந்து நடத்தும் தனியார் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் பிப்ரவரி 16, கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. சுமார் 14க்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் நேரடியாக ஆசிரியர்களை தேர்வு செய்ய இருப்பதால் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) லிங்கை <
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கெரிகேபள்ளியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் வீரமணிக்கு திருச்சியில் நடந்த விழாவில் ‘ராஜ கலைஞன் விருதை’ பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தங்க பதக்கத்துடன் விருது, சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டினார். விருது பெற்ற தலைமை ஆசிரியர் வீரமணிக்கு பள்ளி ஆசிரியர்களும் தன்னார்வலர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
ஓசூரில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள இரு குடோன்கள் இயங்கி வருகின்றது. இந்த குடோனில் இன்று அதிகாலை தீடிரென தீ விபத்து ஏற்பட்டு தீயானது மல மலவென குடோன் முழுவதும் பரவி தற்போது கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது. இதனால் குடோனை சுற்றி உள்ள குடியிருப்பு வாசிகள் அப்பூரவ படுத்து உள்ளனர். இந்த தீயை அணைக்க 7 தீ அணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் 234 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். <
கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள ஊத்தங்கரை அடுத்த கல்லாவி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கல்லாவி, ஆனந்தூர், திருவனப்பட்டி, கிரிகேபள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரம்பட்டி, வீராச்சிகுப்பம், சூளகரை ஓலப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என போச்சம்பள்ளி செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. பணியாளர்களுக்கு ரூ.21,700 – ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி, திறன், எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை செய்து தேர்வு செய்யப்படுவார்கள்.<
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர www.tnmedicalselection.org இணையத்தில் விண்ணப்பித்து மாணவ /மாணவியர் சேர்க்கை பெறுமாறு கல்லூரி முதல்வர் மரு.எம்.பூவதி., கூறியுள்ளார்.O.T Assist, DMLT, Emergency Tech, Anaesthesia உள்ளீட்டு பிரிவுகளுக்கு 85 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.