Krishnagiri

News August 25, 2024

கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்திய 261 பேர் கைது

image

கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையில் இந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் கடந்த மாதம் 22ஆம் தேதி வரையிலும் ரேஷன் அரிசி கடத்தியதாக மொத்தம் 225 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். இதில் சுமார் 1212 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக 261 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 25, 2024

பாஜகவில் இணைந்த முன்னாள் விசிக மாவட்ட செயலாளர்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மேற்கு மாவட்ட பாஜக பயிலரங்கத்தில் நடந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஓசூர் அண்ணா நகரை சேர்ந்த சுரேஷ் தனது ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் நாகராஜ், மாநில துணை தலைவர் நரேந்திரன் மற்றும் மாநில தரவு பிரிவு தலைவர் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

News August 25, 2024

கிருஷ்ணகிரியில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தொடக்கம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீடுவீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார். அதன்படி வாக்காளர் விவரங்கள் சரிபார்க்கும் பணி ஆக. 20 முதல் அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்கள் பெறலாம் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 24, 2024

கிருஷ்ணகிரி அருகே காதல் ஜோடி தற்கொலை 

image

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஒரே சமூகத்தை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி, 17 வயது கல்லூரி மாணவி இருவரும் காதலித்தனர். மாணவியின் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். கொத்தாலம் கிராமத்தில் உள்ள நரசிம்மமூர்த்தி வீட்டில் இருவரும் தூக்கில் தொடங்கியபடி சடலமாக இன்று காலை 11 மணிக்கு மீட்கப்பட்டனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 24, 2024

கிருஷ்ணகிரியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு ஆட்கள் தேர்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம், விலங்குகளுக்கான பிரத்யேக ஆம்புலன்ஸ் சேவை EMRI Green Health Services உடன் இணைந்து தமிழக அரசு தொடங்க உள்ளது. இதில் பணிபுரிய ஓட்டுநர்களுக்கு நேர்முகத் தேர்வு கிருஷ்ணகிரி பழைய அரசு மருத்துவமனையில் இன்று (ஆகஸ்ட் 24) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெற உள்ளது. நேர்முக தேர்வுக்கு அசல் கல்வி சான்றிதழ் மற்றும் ஓட்டுனர் உரிமம் அவசியம் கொண்டுவர வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

News August 24, 2024

பள்ளிகளில் அனுமதியின்றி முகாம் நடத்துவதற்கு தடை

image

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு பிறகு தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இனிமேல் தமிழகத்தில் உள்ள அரசு அல்லது தனியார் பள்ளிகளில் முன் அனுமதியின்றி எந்தவிதமான முகாம்களும் நடத்தக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அனுமதியின்றி முகாம் நடத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

News August 23, 2024

கிருஷ்ணகிரி காவல் துறை எச்சரிக்கை

image

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு பற்றியும், அவரது தந்தை அசோக்குமார் இறப்பை பற்றியும் தவறான செய்தி பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சிவராமன் கைது செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு எலி மருந்து உட்கொண்டதாக ஒப்புக்கொண்டார், அவரது தந்தை சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார் என போலீசார் கூறியுள்ளனர்.

News August 23, 2024

பள்ளிகளில் அனுமதியின்றி முகாம் நடத்துவதற்கு தடை

image

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு பிறகு தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இனிமேல் தமிழகத்தில் உள்ள அரசு அல்லது தனியார் பள்ளிகளில் முன் அனுமதியின்றி எந்தவிதமான முகாம்களும் நடத்தக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அனுமதியின்றி முகாம் நடத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

News August 23, 2024

சிங்காரப்பேட்டை அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி

image

சிங்காரப்பேட்டை அருகே திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இன்னோவா மற்றும் பிக்கப் வேன் இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தாய் மகன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். உறவினர் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்று வீடு திரும்பும் போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

News August 23, 2024

தேன்கனிக்கோட்டையில் வயலுக்குள் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு

image

தேன்கனிக்கோட்டையை சேர்ந்த வெங்கடாசலபதி (51) விவசாயி. இவர் நேற்று காலை வயலில் ஏர் கலப்பை பொருத்திய டிராக்டரை ஓட்டிக்கொண்டு வயலுக்கு சென்றார். அங்கு நிலத்தை உழுது முடித்து விட்டு வயலில் இருந்து வெளியில் ஓட்டி வர வரப்பில் ஏற முயன்ற போது டிராக்டர் நிலை தடுமாறி வயலுக்குள் கவிழ்ந்தது. இதில் டிராக்டரின் அடியில் சிக்கிய வெங்கடாசலபதி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.