Krishnagiri

News March 24, 2025

கப்பல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

மத்திய அரசின் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிஜ்ஜர், ஸ்கபோல்டர் என மொத்தம் 12 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வடிவில் தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார் 24) இந்த லிங்க்கை <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யவும்.

News March 23, 2025

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஓட்டுநர் கைது

image

ஓசூர் என் பி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் யோகேஷை (43). தனது வீட்டிற்கு விளையாட வந்த மூன்று வயது பெண் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஓட்டுநர் யோகேஷை கைது செய்தனர்.

News March 23, 2025

தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

image

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க.

News March 23, 2025

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை

image

ஒசூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழக்கடைகளில், ஒசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தியதில், பெரும்பாலான பழக்கடைகளில் மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் சம்பவம் தெரிய வந்துள்ளது.ஓசூர் பகுதியில் மெழுகு பூசிய ஆப்பிள்களை ஆய்வு செய்த அதிகாரிகள்,வியாபாரிகளை கண்டித்தனர்.கடைகள் சீல் வைக்கப்படும் என உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தனர்.

News March 23, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விபத்தில் மரணம் 

image

திருவண்ணாமலை அருகே நேற்று (மார்ச் 22), பிக்கப் வாகனம் சாலை விபத்தில் சிக்கியதில் வாகனத்தில் சென்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பானூர் கிராமத்தில் வசிக்கும் தமிழரசன் என்பவர் நிகழ்விடத்திலேயே இறந்து விட்டார். உடனிருந்த மற்ற இருவரில் தென்னரசு என்பவருக்கு பலத்த காயமும் செந்தில் என்பவருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் சோகமடைந்தனர்.

News March 22, 2025

ஓசூரில் ரசாயன கலந்த 6 டன் தர்பூசணி பறிமுதல்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ரசாயன ஊசி செலுத்தி விற்பனை செய்யப்பட்ட 6 டன் தர்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர். ரசாயனம் கலந்த பழங்களை சாப்பிடுவது புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலக்கேடுகளை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தர்பூசணியில் ரசாயனம் கலந்துள்ளதா என்பதை மக்கள் கவனமாக சரிபார்த்து வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 22, 2025

குடிநீா் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது

image

கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம். குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

News March 22, 2025

கொடிக்கம்பங்களை ஏப்ரல் 28 க்குள் அகற்ற ஆட்சியர் அறிவுறுத்தல்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாத கொடிக் கம்பங்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய அறிவிப்புகள் அளித்து ,அதன் பிறகு அகற்ற வேண்டும். அகற்றுவதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களிடம் வசூலித்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

News March 22, 2025

ஓசூரில் கன்னட அமைப்பினர் 20 பேர் கைது

image

மேகதாது அணையை கட்ட மறுப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்து கன்னட அமைப்புக்கள் சார்பில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டது.ஓசூர் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற கன்னட அமைப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.

News March 22, 2025

கிருஷ்ணகிரி போலீஸ் தேடும் “புதன்கிழமை கொலையாளிகள்”  

image

ஓசூரில் 12-ம் தேதி இரட்டைக் கொலையிலும், சூளகிரியில் 19-ம் தேதி மூதாட்டி கொலைக்கும் ஒரே சைக்கோ கொலையாளிகள் தொடர்புடையவர்கள் என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மூவரையும் கத்தியால் குத்தி கொன்ற பின்னர் வீடுகளுக்கு தீ வைத்து சென்றுள்ளனர். மூன்றும் புதன்கிழமைகளில் நிகழ்ந்ததால், போலீசார் இவர்களை ‘புதன்கிழமை கொலையாளிகள்’ எனக் குறிப்பிடுகின்றனர். விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

error: Content is protected !!