Krishnagiri

News August 29, 2024

கிருஷ்ணகிரி இருளர் இன மக்களுக்கு சிறப்பு திட்ட முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பண்டைய பழங்குடி இருளர் இன மக்களுக்கு சிறப்பு PMJANMAN திட்டத்தின் மூலம் முகாம் நாளை முதல் செப் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒப்பதவாடி, காரகுப்பம், ஆலப்பட்டி, மத்தூர், உத்தனப்பள்ளி, சிங்காரபேட்டை, தளி, அனுமந்தபுரம், வேப்பனப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெற உள்ள இம்முகாமை பழங்குடியின மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

News August 29, 2024

செப் 4-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

image

கிருஷ்ணகிரி வன்கொடுமை வழக்கு நேற்று உயர்நீதிமன்றதில் விசாரணைக்கு வந்தது. விசாரணை அறிக்கையை செப் 4-க்குள் தாக்கல் செய்யவும், மேலும் சிவராமன் மற்றும் அவரது தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கைகயை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனுடன் கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு பள்ளியை ஆய்வு செய்து மாணவிகள், பெற்றோர்களை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

News August 29, 2024

விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விநாயகர் சிலைகளை வைப்பது மற்றும் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 28, 2024

காவேரிப்பட்டினம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கணக்கில் வராத சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கிருஷ்ண ராஜன் தலைமையிலான ஆய்வில் பணம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News August 28, 2024

சிசிடிவி வைத்தால் மட்டுமே விநாயகர் சிலை வைக்க அனுமதி

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிசிடிவி பொருத்தினால் மட்டுமே விநாயகர் சிலை வைக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் சரயூ அறிவித்துள்ளார். மேலும் நடப்பாண்டில் 5 நாட்கள் மட்டுமே விநாயகர் சிலை வைக்க அனுமதி என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் அனுமதித்த நீர் நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

கிருஷ்ணகிரி சம்பவம் தொடர்பாக முக்கிய உத்தரவு

image

பருகூர் தனியார் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக செப்டம்பர் 4 ஆம் தேதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உயிரிழந்த முக்கிய குற்றவாளி சிவராமன், அவரது தந்தையின் உடற்கூரராய்வு அறிக்கையையும் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

News August 28, 2024

கிருஷ்ணகிரி வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி

image

கிருஷ்ணகிரி வன்கொடுமை வழக்கை சிபிஐ க்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த விசாரணையில் சம்பந்தப்பட்ட வழக்கில் பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மற்றும் கல்வித்துறை அனுமதியின்றி முகாம் நடத்தியது எப்படி என்று அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு மதியம் 2.15 மணிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

News August 28, 2024

கிருஷ்ணகிரியில் நாளை திமுக கலந்தாய்வு கூட்டம்

image

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பில் நாளை(ஆக 29) காலை 11 மணிக்கு தேவராஜ் மஹாலில் திமுக பொது நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்திற்கு உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சரும் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளருமான சக்கரபாணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். இதில் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட செயலாளர் மதியழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News August 28, 2024

மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆக 31ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்- 2, டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ. பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

ஓசூர் பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆலோசனை

image

ஓசூா் முதல் பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிக்கையை இறுதி செய்வதற்கான ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, ஒசூா் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த், ஒசூா் உதவி ஆட்சியர் பிரியங்கா ஆகியோருடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை செய்தனர்.