Krishnagiri

News February 22, 2025

தட்டச்சுப் பாடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தட்டச்சு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கான தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேதி 1-3-2025 மற்றும் 2-3-2025 ஆகிய தேதிகளாகும். ஜூனியர் கிரேடு தட்டச்சுப் பாடங்களுக்கான தேர்வுகள் ஐந்து பிரிவுகளாகவும், சீனியர் தர தட்டச்சுத் தேர்வுகள் நான்கு பிரிவுகளாகவும் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளில் மட்டுமே தேர்வர்கள் ஆஜராக வேண்டும்.

News February 22, 2025

மாவட்ட ஆட்சியருக்கு நன்றியை தெரிவித்த மக்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அடுத்த சாப்பர்த்தி பஞ்சாயத்து பந்தேரி செல்லும் சாலையில் உள்ள பழைய பாலத்தை சீரமைக்க கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான பத்திரிக்கை செய்தி கோரிக்கையை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலத்தை சீரமைக்கும் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு ஊர்மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

News February 21, 2025

காவல் துறை சார்பில் இரவு ரோந்து பணி விவரம்

image

மாவட்ட காவல் துறை சார்பில் காவலர்கள் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ரோந்து பணியில் இடுபடுகின்றனர். இதில் கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து தலைமையில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் இரவு ரோந்து பணியில் இடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி மற்றும் காவல் கட்டுபாட்டு அறை-04343230100 எண் அவசர உதவி எண் 100 காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

News February 21, 2025

ஆசிரியரை கொடூரமாக தாக்கி வழிப்பறி- 3 சிறார்கள் கைது 

image

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் டேவிட்ராஜன்(57) தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தன் நண்பர் வீட்டிற்கு வந்தார். பின்னர் காஞ்சிபுரம் செல்ல பஸ் நிலையத்திற்கு அதிகாலை நடந்து சென்றபோது பெங்களூரு சாலையில் 3 சிறுவர்கள் கொடூரமாக தாக்கி அவரிடமிருந்த மொபைல்போன், பணத்தை எடுத்துக் கொண்டு தப்பினார். காயமடைந்த டேவிட்ராஜன் கொடுத்த புகாரின் பேரில் 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். 

News February 21, 2025

சென்னையில் ரூ.70,290 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

image

சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 22 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 28 வயதிற்குள் இருக்கும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.70,290 வரை சம்பளம். ஆர்வமுள்ளவர்கள் https://clri.org/careers.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச்.01. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 21, 2025

கிருஷ்ணகிரியில் குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்

image

கிருஷ்ணகிரியில் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற இருவரும் பொன்மலைக்குட்டை பெருமாள் கோயில் பின்புறம் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அவர்களை கைது செய்ய முயன்ற போது காவலர்களை கத்தியால் தாக்கியுள்ளனர். தற்காப்புக்காக போலீசார் துப்பாகியால் சுட்டதில் சுரேஷ் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

News February 21, 2025

ஓசூரில் இரண்டு நாள்கள் இலவச மருத்துவ முகாம்

image

ஓசூரில் வரும் பிப்ரவரி 22 மற்றும் 23 தேதிகளில் தனியார் மருத்துவ கல்லூரி, மருத்துவமனை நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது. ரூபாய் 3000 மதிப்புள்ள பலதரப்பட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட இருக்கிறது. அனைவரும் மருத்துவ முகாமில் கலந்துக்கொண்டு பயன் பெறலாம். ஷேர் பண்ணுங்க 

News February 21, 2025

கிருஷ்ணகிரியில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரியில் இன்று (பிப்.21) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் தனியாா் துறை முகாமில் இன்று காலை 10 முதல் 1 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன’. இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News February 20, 2025

கிருஷ்ணகிரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரியில் (பிப்.21) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் தனியாா் துறை முகாம் காலை 10 முதல் 1 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன’ என்றார். ஷேர் பண்ணுங்க

News February 20, 2025

அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தர சான்றிதழ்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள், விளையாட்டு மைதானம், தனி நூலகம், கணினி வழியாக கல்வி, ஸ்மார்ட் போர்ட், ஆடிட்டோரியம் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் பசுமை பள்ளியாக திகழும் வகையில் செயல்படுவதை பி.எம்.கியூ.ஆர் நிறுவனம் நேரடியாகவும், இணைய வழியாகவும் 3கட்டங்களாக ஆய்வு செய்து ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் வழங்கி உள்ளது.

error: Content is protected !!