India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது- 2024 அறிவிக்கப்பட்டுள்ளது. இரா.ஸ்வர்ணா பட்டதாரி ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி சூசுவாடி, ஒய். நாராயணப்பா முதுகலையாசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி நல்லூர், சி.பிரபா அரசு உருது மேல்நிலைப்பள்ளி ஒசூர், சா.சாமுண்டீஸ்வரி உடற்கல்வி ஆசிரியர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி போச்சம்பள்ளி, ஆகியோர் விருதுகளை பெறவுள்ளனர்.
ஒசூா் முனீஸ்வர் நகரைச் சேர்ந்தவர் சிவன். இவர் டைட்டான் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் நித்யா ஸ்ரீ பாட்மிண்டன் விளையாட்டில் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலம் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,ஒசூர் எம்எல்ஏ ஒய். பிரகாஷ் என அனைவரும் பாராட்டினர்.
கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சிலை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி நகரில் விநாயகர் சிலை விற்பனை செய்பவர்கள் 12 அடிக்கு உயரமான சிலைகளை விற்பனை செய்யக் கூடாது. களிமண்ணால் ஆன சிலைகளை மட்டுமே வைக்கவும் நகரில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், மகராஜகடை, வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைக்க கட்டாயம் அனுமதி பெற வேண்டும். சிலைகள் வைக்கப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். மேலும் வழாக்குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும், போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி கூறியுள்ளார். ஷேர் பண்ணுங்க.
கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒரு தனியார் பள்ளி முதல்வர் விநோதினியை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரியில் போலி என்சிசி நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை மூடி மறைத்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓசூரில் VST Tillers & Tractors நிறுவனம் சுமார் ரூ.100 கோடி செலவில் உலகளாவிய தொழில்நுட்ப மையத்தை அமைக்க உள்ளது. விவசாய உபகரணங்கள் மற்றும் டிராக்டர்கள் தயாரிப்பில் இந்த நிறுவனம் தற்போது முன்னணியில் உள்ளது. ஓசூரில் உலகளாவிய தொழில்நுட்ப மையத்தை நிறுவுவதன் மூலம் அதன் R&D (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) திறன்களை மேம்படுத்த உள்ளது. ஷேர் பண்ணுங்க.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 117 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தினமும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ரூ.2.5 கோடி வரையில் மது விற்பனை நடைபெறுகிறது. இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் முதல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் மது விற்பனை அமலுக்கு வரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வழியாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் செப். 2-ஆவது வாரத்தில் தொடங்கப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் இதில் சேரலாம். விவரங்களுக்கு பேராசிரியர் 9942279190, 7339002390, உதவியாளர் 9500771299 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் மண்ணுங்க.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று (02.09.2024) பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள் தங்கள் கோரிக்கைகளை ஆட்சியரிடம் வழங்கினர். உடன், கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி பறக்கும்படை தனி தாசில்தார்,தேன்கனிக்கோட்டை தனி தாசில்தார், சூளகிரி தாசில்தார், போச்சம்பள்ளி தாசில்தார், அஞ்செட்டி தாசில்தார், சிப்காட் யூனிட்-3, பகுதி -3 தனி தாசில்தார், ஓசூர் இனாம்செட்டில்மெண்ட் அலகு-2 தனி தாசில்தார், ஓசூர் தாசில்தார் உட்பட 11 தாசில்தார்களை இடமாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.