Krishnagiri

News March 27, 2025

வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனி வியாபாரிகள், வணிகா்கள் தா்ப்பூசணி, மாம்பழம், வாழைப்பழம் போன்ற கனிகளை செயற்கை வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்யக் கூடாது. கனிகளை விற்பனை செய்வோர் சட்ட விதிகளைப் பின்பற்றி உணவு வணிகத்தில் பதிவு அல்லது உரிமம் பெற்று காய்கனிகளை விற்பனை செய்ய வேண்டும். மீறினால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் எச்சரித்துள்ளார்.

News March 27, 2025

பிளஸ் 1 மாணவி கர்ப்பம்

image

தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் 15 வயது சிறுமி, இவர் +1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி பள்ளிக்கு செல்லும் போது, கூலித்தொழிலாளியான வெங்கடேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய வெங்கடேஷ், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமடைந்தார். இதையறிந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரின் காவல்துறை போக்சோவில் வெங்கடேஷை கைது செய்தனர்.

News March 26, 2025

இயற்கை அழகு நிறைந்த மேலகிரி மலைகள்

image

மேலகிரி மலைகள், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு வனப்பகுதி ஆகும். பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் பெற்ற இந்த மலைகள் சாகச விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக இருக்கும். மேலும், செல்லும் வழி எங்கும் பனி மூட்டம் சூழ ரம்மியமாக காட்சியளிக்கும் மேலகிரி மலைகள் வெளிநாடுகளுக்கு டிரக்கிங் செல்லும் அனுபவத்தை நமக்கு தருகின்றன. இந்த செய்தியை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 26, 2025

இந்திய ரயில்வே வேலை: சூப்பர் சம்பளம்

image

இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ, டிப்ளமோ, BE, B.tech, முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.19,900 சம்பளம் வழங்கப்படும்.

News March 26, 2025

பர்கூர்:சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் பேரூராட்சி விவசாயம், துணி வியாபாரம், மாங்கனி,தேங்காய், கிரானைட் கற்கள் கொண்ட நகரமாகவும் ஆண்டிற்கு ஐம்பது இலட்சத்துக்கு மேலும் வருவாய் ஈட்டி வரும்தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்து வரும் பர்கூர் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டுவதால் சிறப்புநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக நகராட்சித்துறை அமைச்சா் அமைச்சர் நேற்று முன்தினம் சட்டசபையில் அறிவித்துள்ளார்.

News March 26, 2025

கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை

image

ஓசூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த கொலை வழக்கில் உனிசெட்டியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை அவரது மனைவி ரூபா மற்றும் கள்ளக்காதலன் தங்கமணி ஆகியோர் கொலை செய்த வழக்கில் இருவருக்கும் நீதிபதி சந்தோஷ் ஆயுள் தண்டனையும் தலா நான்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து இருவரையும் தேன்கனிக்கோட்டை போலீசார் கோவை மற்றும் சேலம் சிறையில் அடைத்தனர்.

News March 25, 2025

குழந்தை வரம் அருளும் சந்திரசூடேஸ்வரர்

image

ஓசூர் நகரின் மைய பகுதியில் தேர்பேட்டை எனும் இடத்தில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. மூலவர் சந்திரசூடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள ஈசனை வழிபடுவோர்களுக்கு மனநிம்மதி மற்றும் உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. மேலும் குழந்தை இல்லாதவர்கள் இங்குள்ள வில்வ மரத்தில் தொட்டில் கட்டி வழிபடுகிறார்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 25, 2025

கிருஷ்ணகிரி மக்களே கண்டிப்பா இத பண்ணிடுங்க!

image

தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள், வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தவறும் பட்சத்தில் குடும்பஅட்டை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 25, 2025

மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்

image

ஊத்தங்கரை, மூன்றம்பட்டியில், பொது இடத்தில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் திமுகவினர் 5 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடிக்கம்பம் மின்சார வயரில் உரசியதால் ஐந்து பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்த்திலேயே திமுக கிளைச் செயலாளர் ராமமூர்த்தி உயிரிழந்தார். மேலும் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றன. இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.

News March 24, 2025

ரூ.1,87,000 வரை சம்பளம்; சேலம் TIDEL Park வேலை!

image

சேலம், டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!