India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர பிரசாரத்தை நேற்று தொடங்கினார். இந்த வகையில் வரும் 29ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதற்கான பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தேர்வுசெய்ய, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நேற்று கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே உள்ள தேவராஜா திடலினை ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக சார்பில் சி.நரசிம்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்பி செல்லக்குமாரே மீண்டும் அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் மோதல் கன்ஃபார்ம்! உங்கள் கருத்து என்ன?

ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி ஊ.ஒ.ந.நி பள்ளியில் நேற்று (மார்ச் 22) உலக நீர் தினம் பொறுப்பு தலைமை ஆசிரியர் பிரதீபா தலைமையில் கடைப்பிடிக்கப்பட்டது. நீரின் சேமிப்பு, அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர். உலக நீர் தினத்தை முன்னிட்டு ஓவியம், கவிதை, சுலோகன், பேச்சுப் போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இறுதியில் நெகிழி பையை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள புதிரை வண்ணார் மக்களின் கல்வி, சமூக பொருளாதார நிலை பற்றி கணக்கெடுப்பு ஐபிஎஸ்ஒஎஸ் என்ற நிறுவனத்தின் மூலம் நடைபெற உள்ளது. எனவே, அனைத்து புதிரை வண்ணார் இன மக்களும் கணக்கெடுப்பில் தவறாது கலந்துக்கொண்டு தங்களைப் பற்றிய அனைத்து தகவலையும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தெரிவித்துள்ளார்.

ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய தாலுகாக்களுக்கு மார்ச் 25-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு 4 தாலுகாக்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் கே.எம்.சரயு அறிவித்தார். மேலும், மார்ச் 25 உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஏப்.6 பணி நாள் எனவும் அறிவித்துள்ளார்.

மத்திகிரி தின்னூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் சுமித்ரா (25) ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்துவந்தார். இந்த நிலையில் சுமித்ரா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததால் பல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணமாகவில்லை, இதனால் மனமுடைந்த சுமித்ரா சம்பவம் அன்று தின்னூர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஏணிபெண்டா பகுதியை சேர்ந்தவர் அருண் (24), மேஸ்திரி. இவருக்கு தர்ஷன் (3) என்ற குழந்தை உள்ளது. சம்பவத்தன்று காலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தர்ஷன் அங்குள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாரதவிதமாக தவறிவிழுந்தது. குழந்தையை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அலுவலகத்திற்கான பந்தல்கால் நடும் பணியை கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், பா்கூா் எம்எல்ஏவுமான தே.மதியழகன் தலைமை தாங்கி நேற்று (மார்ச் 21) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக, காங். கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியலை சற்றுமுன் வெளியானது. இந்தப்பட்டியலில் மொத்தம் 9 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில், கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக C.நரசிம்மன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி, தேன்கனிகோட்டை அடுத்த பிலிமுத்திரை கிராம பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முனிராஜ் என்ற வாலிபர் அவருக்கு சொந்தமான நர்சரி தோட்டத்தில் நாட்டு துப்பாக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சோதனை இட்டு அனுமதி இன்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை கைப்பற்றி முனிராஜ் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
Sorry, no posts matched your criteria.