India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி – சிகரலப்பள்ளி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் அந்தப் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை இட்டபோது உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ₹4 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, சூளகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம் மோட்டூர் கிராமத்தில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெயபிரகாஷ்க்கு ஆதரித்து முன்னாள் அமைச்சர் வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி வாக்கு சேகரித்தார். கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ. அசோக்குமார், ஊத்தங்கரை எம்.எல்.ஏ. தமிழ்செல்வம், மற்றும் மாவட்ட, ஒன்றிய ,நகர, பேரூர் கழக செயலாளர்கள் கிளை கழக பொறுப்பாளர்கள், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம், பிசினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல் மற்றும் டாக்டர் மூனீஸ் சாரிடபுள் சார்பாக சுமார் 2500 நபர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு நடைபேரணியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம். சரயு தலைமையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதிமொழியை நேற்று எடுத்துக்கொண்டனர்.

பர்கூர் அடுத்த அண்ணா நகர் சாமியார் கொட்டாய் பகுதியில் இன்று ஏப்ரல் ஏழாம் தேதி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி வீடு வீடாக தேர்தல் அலுவலர்கள் செய்து வருகின்றனர். மேலும் பொது மக்களுக்கு கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்.

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பர்கூர் ஒன்றியம் பாகம் எண் 190ல் இருக்கும் வாக்காளர்களுக்கு வருகின்ற 19.04.24 அன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் சிலிப்புகளை BLO அலுவலர் மருதுராஜன் நேற்று ராம்நகர் செவத்தான் கொட்டாய் தாடிகாரன் கொட்டாய் பள்ளகொள்ளை ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு சென்று வழங்கினர்.

ஓசூர் அருகே சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவிலிருந்து ஓசூருக்கு வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில்
வாகனத்தில் 69 பெட்டிகளில் தங்க நகைகள் இருந்த நிலையில், அவற்றில் 45 பெட்டிகளுக்கு மட்டுமே உரிய ஆவணங்கள் இருந்தன. நகையை கொண்டு வந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அனைத்து நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குருபரப்பள்ளி கிராமத்தில் எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டுவருகிறது. இந்த மையத்தில் நேற்று ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை நிரப்பியுள்ளார்கள். நேற்று இரவு ஏடிஎம் வெல்டிங் இயந்திரத்தை மூலம் உடைத்து மர்ம நபா்கள் ரூ.10 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பொது மக்களின் தகவலின்பேரில் குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 208 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், ஒரு வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

ராயக்கோட்டை போலீசார் கெலமங்கலம் சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, வன்னியபுரம் தனியார் தொழிற்சாலை முன்பு சந்தேகப்படும்படி இருந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் நல்லராலப்பள்ளியை சேர்ந்த ஜெயப்பா மகன் சங்கர்(38) என்பதும், அவர் கர்நாடகாவிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து ஒசூர் சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.