India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை மும்முரமாக நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் கெலமங்கலம் போலீசார்
தடிகல் அருகே உள்ள கொடியூர் கிராமத்தை சேர்ந்த முருகேஷ் மற்றும் அவர்கள் நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஆலத்தியூர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் முனுசாமி (33) என்பவர் தனியார் பால் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் ஊத்தங்கரை அருகே கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் விளையாட்டு மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

போச்சம்பள்ளியை அருகே உள்ள பண்ணந்தூர் பகுதியை சேர்ந்த வேடியப்பன் மகன் கணபதி(13), அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சாணாங்கொல்லை பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது வழியாக வந்த டிராக்டர் மாணவன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கணபதியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கணபதி பரிதாபமாக உயிரிழந்தார். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 71.50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதியில் 72.10%, பர்கூரில் 73.18%, கிருஷ்ணகிரியில் 73.13%, வேப்பனப்பள்ளியில் 74.99%, ஒசூரில் 67.03%, தளி தொகுதியில் 70.11% சதவீதம் என மொத்தம் 71.50 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆண்கள் 5,87,007 பேர், பெண்கள் 5,73,412 பேர், இதர வாக்காளா்கள் 79 பேர் என மொத்தம் 11,60,498 பேர் வாக்களித்துள்ளனர்.

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மக்களவைத் தேர்தலையொட்டி நேற்று (ஏப்ரல் 19) கிருஷ்ணகிரி தொகுதி பாஜக வேட்பாளர் சி.நரசிம்மன் தனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரியில் உள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், நாடு முழுவதும் பாஜக 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். குறிப்பாக கிருஷ்ணகிரியில் பாஜக வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுக கழக கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள சிந்தங்கம்பள்ளி கிராமத்தில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்களித்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அவர் கூறும்போது பொதுமக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமை கட்டாயம் செலுத்த வேண்டும் என்றார்.

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் நடைபெற்று வருகிறது இதை ஒட்டி இன்று 19.04.2024 முதன்முறை வாக்களித்த இளம் வாக்காளர்கள், முதன்முறையாக வாக்களிப்பது தங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேர்தல் பணிக்காக வந்த 850க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
வாக்குச்சாவடி மையங்களில் போதுமான கழிவறை, குடிநீர், உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கடவரஅள்ளி வாக்கு சாவடியில் மக்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர். அதனையொட்டி தாசில்தார் மற்றும் காவல்துறை, வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதனால் மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
Sorry, no posts matched your criteria.