India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தர்மபுரி மாவட்டம் அதகப்பாடி அடுத்த ஏ.செக்காரப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (34), விவசாயி. இவர் நேற்று முன் தினம் இரவு டூவீலரில் கிருஷ்ணகிரி- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் பையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாண்டியன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி, சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெள்ளகுட்டை பகுதியில் அனுமதி இன்றி பெட்டிக்கடை சுவற்றில் இரட்டை இலை சின்னம் வரைந்ததாக திருமூர்த்தி என்பவரும், குருகப்பட்டி பகுதியில் அனுமதியின்றி கைச்சின்னம் வரைந்ததாக தமிழ்வாணன் என்பவர் மீதும் தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வாகன ஓட்டிகள் பிரிவு சாலை இல்லாத பகுதிகளில் நேரடியாக சர்வீஸ் சாலைக்கு வாகனங்களை இறக்கி வருகின்றனர். இதனால் பிரிவு சாலையில் வரும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயத்தில் உள்ளனர். இது குறித்து நெடுஞ்சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து விபத்தை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் நேற்று தருமபுரி மாவட்டத்தில் வருகை புரிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கோபிநாத் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டி பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டனர். இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ளது புன்னகரம் கிராமம். இந்த ஊர் வழியாக டிப்பர் லாரிகளில் கற்களை ஏற்றி செல்கின்றனர். இந்நிலையில், இன்று கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஒன்று நிலைத்தடுமாறி ஸ்ரீ ராமப்பா என்பவரின் வீட்டின் மீது மோதியதில் வீடு தரை மட்டமாகியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து பேரிகை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்க வெடி வைத்ததில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், தங்களுக்கு புது வீடு கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மேலும், மண்ணில் புதைத்து வைக்கப்பட்டுள்ள 2 வெடி மருந்துகளை அப்புறப்படுத்தவும் கோரிக்கை வைத்துள்ளனர். 3 வீடுகள் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொளாகி உள்ளது.

ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாளிப்பட்டி, பெரிய தள்ளாடி உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பேனா, அளவுகோல், பென்சில், பாகைமானி போன்ற தேர்வு உபகரணங்களை ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கணேசன் வழங்கி நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வாழ்த்தினார்.

சூளகிரி அடுத்துள்ள கொட்டாவூரை சேர்ந்தவர் சின்னராஜ் (59) விவசாயியான இவர் கடந்த 27ஆம் தேதி அன்று டூவீலரில் அங்கொண்டப்பள்ளியில் சென்றபோது அந்த வழியாக மற்றொரு டூவீலர் சின்னராஜ் ஓட்டி சென்ற டூவீலரில் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சின்னராஜ் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணகிரியில், பெங்களூரு ரோடு அருகே அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு நேற்று (மார்ச் 29) காலை 7 மணி அளவில் சிலுவைப்பாதை நடைபெற்றது. பின் மாலை 6:30 மணி அளவில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் ஆலயத்திற்கு வருகைபுரிந்து ஆராதனையில் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கோபிநாத் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஒசூரில் ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் அனுமதியின்றி அவா் கூட்டம் நடத்தியதாக பறக்கும் படைப்பிரிவு அதிகாரி விஜயா சாமுண்டீஸ்வரி ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் உள்பட 400 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Sorry, no posts matched your criteria.