India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, 54- ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்துாரில் தீவிர வாகன சோதனையை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு இ.ஆ.ப., இன்று 04.04.2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார உடனிருந்தனர்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காமாட்சிப்பட்டியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் மாவட்ட செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன், மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி அமைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் மையத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கே.எம். சரயு மற்றும் கூடுதல் ஆட்சியர் / ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வந்தனா கர்க் ஆகியோர் நேற்று வேளாண் கல்லூரி மாணவ, மாணவியருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

சூளகிரி கோட்டை தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இப்பகுதியில் குடிநீர் வரவில்லை என்று பெண்கள் காலிக்குடங்களுடன் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சூளகிரி போலீசார் அவர்களிடம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர். இதை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, 54- வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வேப்பனஹள்ளி அரசு நடுநிலைப்பள்ளி, உருது பள்ளிகளில் உள்ள வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

காமன்தொட்டிக்குட்பட்ட மாற்று காட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், முன்னாள் அமைச்சர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி முன்னிலையில் தகவல் தொழில் நுட்பபிரிவு பிரசன்னா தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதில் மாவட்ட செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ.கே. அசோக்குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம். சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

பாகலூரை சேர்ந்தவர் மகேந்திரன். பூ கடை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்களான நிலையில் குழந்தைகள் இல்லை. அதனால் மகேந்திரன் குடி பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். அதிலிருந்து மீள சர்ஜாபுரத்திலுள்ள மறுவாழ்வு மையத்தில் இருந்துள்ளார். அங்கிருந்து வந்தவர் மீண்டும் குடிக்க ஆரம்பித்துள்ளார். அதை மனைவி கேட்டதால் கழுத்தை அவரை கொலை செய்துவிட்டு கணவன் தலைமறைானார் .

கிருஷ்ணகிரி அருகே உள்ள பிஆர்ஜி மாதேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சென்னை ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். சொந்த ஊருக்கு வந்தவர், கடந்த 24-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றுள்ளார். கடந்த 1-ந் தேதி ஊருக்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்தவர் உள்ளே சென்று பார்த்தபோது 2 லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் திருடு போயுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சிங்காரப்பேட்டை உள்வட்டம் இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியான மூன்றாம்பட்டி தளபதி நகரில் நேற்று (ஏப்ரல் 2) மக்களவைத் தேர்தல் 2024 தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, நாடக கலைஞர்கள் மூலம் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
Sorry, no posts matched your criteria.