India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,
கிருஷ்ணகிரி, சேலம், தேனி, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இன்று மாலை 7 மணி வரை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீம்மாண்டப்பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினரின் தீவிர வாகன சோதனையை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ.ஆ.ப., நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்து கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி பேசும் மக்கள் வசிக்கும் ஒரு வித்தியாசமான மக்களவைத் தொகுதி. இங்கு 1980, 1984, 1991 என ஹாட்ரிக் வெற்றிபெற்று மக்கள் தலைவனாக வலம்வந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி (காங்.). 1991 நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, காவிரி பிரச்சனையால் கலவரம் வெடித்தது. தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை தாங்க முடியாத வாழப்பாடி தனது மத்திய அமைச்சர் பதவியை துச்சமென தூக்கி எறிந்தார்.

கிருஷ்ணகிரி சங்கல்தோப்பு சையத்பாஷா தர்காவில் நாளை துவங்க இருந்த உருஸ் திருவிழா, நாடாளுமன்ற தேர்தலால் வரும் 21ஆம் தேதி துவங்க உள்ளது. அதன்படி 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு அனைத்து ஜமாத் கமிட்டியினர் முன்னிலையில் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. விழாவை முன்னிட்டு வாணவேடிக்கையுடன் சந்தனகுடம் மலர் அலங்காரத்துடன் ஊர்வலம் நடக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி போலீஸ் எஸ்ஐ சிவக்குமார் மற்றும் போலீசார் சிங்கிரிப்பள்ளி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்தவர்களைச் சுற்றி வளைத்து விசாரித்தனர். அவர்கள் பெருமாள் (40), நாகராஜ் (35), சண்முகம் எனத் தெரிந்தது. அவர்களை கைதுசெய்து பணம் மற்றும் 3 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சப்படி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூரூ கோரமங்கலம் பகுதியை சேர்ந்த வாலிபர் இன்று (ஏப்ரல் 17) சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கல்லாவி பேருந்து நிலையம் அருகே கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் பேரணி சென்று கடை வியாபாரிகளிடம் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடம் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்துக்கு ‘கை’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மோகனப்பள்ளியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி கங்கம்மா (43). இவர்கள் கடந்த 7ஆம் தேதி அகரம் அருகே டூவீலரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கங்கம்மா எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை பெங்களூரு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிசிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.