India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், ஊரகப் வளர்ச்சி துறை சார்பாக நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் கோடைக் காலத்தை முன்னிட்டு சீரான குடிநீர் விநியோக பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் தலைவர் கே.எம் சரயு இ.ஆ.ப அவர்கள் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் வந்தனா இ.ஆ.ப அவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கலந்து கொண்டார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்ட நீதித்துறையில் 59 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஊத்தங்கரை அருகே காமராஜர் நகரைச் சேர்ந்த சிவா-விஜயபிரியா தம்பதியரின் மகன் வினித் (10) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கையில் வைத்திருந்த ₹5 நாணயத்தை விழுங்கியுள்ளார். உடனே ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் தொண்டையில் சிக்கிக் கொண்ட நாணயத்தை மருத்துவர்கள் இன்று லாவகமாக அகற்றி உயிரை காப்பாற்றினர். இதையடுத்து, மருத்துவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தின்னகழனி கிராமம் அருகே நேற்று இரவு மதுபோதையில் வந்த மர்ம கும்பல் கார்த்திக் என்ற இளைஞர் மீது பைக்கை ஏற்றியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில், கொலை நடந்த 12 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளான கார்த்திக், அருண், சிவா மற்றும் கணேஷ் ஆகிய 4 பேரை இன்று கைது செய்துள்ளனர்.

ராயக்கோட்டை பகுதியில் மழையின்மையால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் விவசாய சாகுபடியான காய்கறிகள், பூக்கள் மற்றும் கொத்தமல்லி, புதினா போன்றவை பசுமையாக காட்சியளிக்கிறது. தென்னை, மா, பலா போன்ற மரங்களும் நல்ல பலனை கொடுத்து வருகிறது. பலா மரங்களில் பலா காய்கள் கொத்து, கொத்தாக காய்த்துள்ளதால் பாரப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.

போச்சம்பள்ளி அருகே தட்டக்கல் பகுதியில் நேற்று தேவாங்கு ஒன்று அடிப்பட்ட நிலையில் இருந்தது. இதை பார்த்த சிவகுரு என்பவர் அதை மீட்டு, அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் கிருஷ்ணகிரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறையினர் நேரில் வந்து அடிப்பட்ட நிலையில் இருந்த தேவாங்கை மீட்டு சென்றனர்.

ஒசூர் அடுத்த தளி ஜெயந்தி காலனியில் ஆண் சடலம் கொலை செய்து கிடப்பதாக தளி போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது கொலை செய்யப்பட்டவர் குனிக்கல் கிராமத்தை சேர்ந்த சதீஷ்(34) என்பது தெரியவந்தது. சதீஷ் ஏற்கனவே ஒரு கொலை, 3 கொலை முயற்சி என 6 வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் முன்விரோத காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க அதிகரித்து வரும் கடும் கோடை வெப்பநிலையை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களின் தாகம் தீர்க்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்ட தண்ணீர் பந்தல் திறப்புவிழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் திறந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. ஓசூர் பகுதி கழக செயலாளர்கள் அசோக் ரெட்டி வாசுதேவன், ஆகியோர் தலைமையில், முன்னிலை ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் பாசறை மாவட்ட செயலாளர் ராமு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி
அவர்கள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்

போச்சம்பள்ளி அடுத்த மேட்டு சூளக்கரையை சேர்ந்தவர் மேகநாதன் (28)கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 1 பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று (ஏப்-25) இவரும் தனது நண்பரான அஜித் என்பவரும் ஒரே டூவீலரில் போச்சம்பள்ளி நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது எதிரே வந்த டிரக்டர் மோதியதில் மேகநாதன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.