Krishnagiri

News November 17, 2024

கிருஷ்ணகிரி போலி மருத்துவர் கைது

image

கிருஷ்ணகிரி பழையபேட்டை அருந்ததி மாரியம்மன் கோயில் தெருவைச் சோர்ந்தவர் நாகராஜ் (42). இவர், அதே பகுதியில் நடராஜ், கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார். இதுகுறித்து புகார்கள் வந்ததையடுத்து தேசிய ஊரக சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி நகர போலீசார் வழக்கு பதிந்து, போலி மருத்துவர் நாகராஜை கைது செய்தனர்.

News November 16, 2024

அகழாய்வில் 327 பொருட்கள் கண்டெடுப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சென்னானூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழாய்வில் 10 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. காலவரிசைப்படி நுண்கற்காலம், புதிய கற்கலாம், புதிய கற்காலத்திலிருந்து இரும்பு காலத்திற்கு மாற்றம் அடைந்த நிலை மற்றும் வரலாற்று தொடக்க காலத்தின் நிலை ஆகியவற்றை அறியமுடிகின்றது என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

News November 16, 2024

மண்டலங்களுக்கிடையிலான ஹாக்கி போட்டியில் தனியார் கல்லூரி முதலிடம்

image

ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகங்களுக்கிடையேயான ஆண்கள் ஹாக்கி போட்டி நவம்பர் 12, 13 என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் 17 மண்டலங்களில் இருந்து அணிகள் கலந்துகொண்டன. இறுதிப் போட்டியில் அதியமான் பொறியியல் கல்லூரி வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற அணியினரை அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறக்கட்டளை செயலாளர் லாசியா தம்பிதுரை பாராட்டினார்.

News November 16, 2024

உடல் உறுப்பு தானம் செய்த விவசாயிக்கு 

image

மத்தூர் அருகே மாதம்பதி பகுதியை சேர்ந்த விவசாயி சின்னத்தம்பி (65). சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த டூவீலர் மோதி சின்னத்தம்பி படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. கோட்ட வருவாய் ஆய்வாளர் ஷாஜகான், போச்சம்பள்ளி வட்டாச்சியர் சத்தியா, சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் ஆகியோர் சின்னத்தம்பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

News November 15, 2024

சிறந்த பள்ளிக்கான கேடயத்தை வழங்கிய அமைச்சர்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கங்காவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ஒழுக்கம், வருகை பதிவேடு, பள்ளி சுகாதாரம், மாணவர்களின் கல்வித் தேர்ச்சி உள்ளிட்ட அனைத்திலும் சிறந்த பள்ளியாக விளங்கி வருவதால் இப்பள்ளியை சிறந்த பள்ளியாக தேர்வு செய்து இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோனா மேரியிடம் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று கேடயத்தை வழங்கிப் பாராட்டினார்.

News November 15, 2024

நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் அனைத்து விதமான திருத்தங்கள் செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இச்சிறப்பு முகாம்கள் நாளை (நவ.16), நாளை மறுநாள் (நவ.17) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News November 15, 2024

கிருஷ்ணகிரியில் எதிர்க்கட்சி தலைவர் திட்டவட்டமாக அறிவிப்பு

image

பர்கூர் அருகே உள்ள எமக்கல் நத்தம் கிராமத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.அக்கூட்டத்தில் பேசிய அவர் “வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம். கூட்டணிக் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுப்பது எல்லாம் மற்ற கட்சிகளுக்குத்தான் அது பாஜகவுக்குப் பொருந்தாது” என தெரிவித்தார்.

News November 14, 2024

உலக நீரிழிவு நாள் விழிப்புணர்வு ஊர்வலம்

image

ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி சார்பில் உலக நீரிழிவு நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் கிரிஷ் ஓங்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் மருத்துவக்கல்லூரி துணை கண்காணிப்பாளர் தீபக் ஆனந்த், இருப்பிட மருத்துவர் பார்வதி, பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

News November 14, 2024

குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு 7சதவீத வட்டியில் ரூ.20 லட்சம் வரை நடைமுறை மூலதன கடன்கள், இயந்திரங்கள் கொள்முதல் செய்தல், நிறுவனத்தின் கட்டடங்கள் கட்டுதல் போன்றவற்றுக்கு கலைஞா் கடனுதவி திட்டத்தின் கீழ் அசையா சொத்து அடமானத்தின் பெயரில் கடனுதவி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04343 235567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 14, 2024

கிருஷ்ணகிரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (நவ 15) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், விந்தியா இன்போ மீடியா, பிரபால் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 8-ம் வகுப்பு முதல் பட்டதாரி வரை உள்ள அனைவரும் இந்த முகாமில் பங்கேற்கலாம் என அறிவித்துள்ளனர்