India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தின் மூலம், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2025&26ன் கீழ் மீன் வளர்ப்பு செய்திடும் விவசாயிகள் அதற்கான திட்டங்களில் பயன்பெற நாளைக்குள்(செப்.செப்.30) விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
காவேரிப்பட்டினம் அருகே இருசக்கர வாகனம் மற்றும் கார் மோதலில் பூவரசன் என்ற ராணுவ வீரர் நேற்று (செப்.28) உயிரிழந்துள்ளார். சப்பானிப்பட்டி கிராம பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதான அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் இன்று செப்-29 (திங்கள்) அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது. இப்போட்டியில் 17 வயது உட்பட்ட ஆண்கள் 8 கிமீ, பெண்கள் 5 கிமீ, 25 வயது உட்பட்ட ஆண்கள் 10 கிமீ, பெண்கள் 5 கிமீ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செ.28) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரி மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு https://aavot.com என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என டைப் செய்து அதன் பிறகு Check Land என்பதை க்ளிக் செய்தால் உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா விவரங்களை அறிந்து கொள்ளலாம். அல்லது TamilNilam என்ற செயலி மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க.
ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் <
கிருஷ்ணகிரி மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. SHARE பண்ணுங்க.
கிருஷ்ணகிரி மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா? தமிழக அரசு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தையல் இயந்திரம் வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கல்வி தகுதியும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். நல் உள்ளம் கொண்ட கிருஷ்ணகிரி மக்களே இதனை SHARE பண்ணுங்க
கிருஷ்ணகிரி பாஞ்சாலியூர் அருகே யாசின் நகர் பகுதியை சேர்ந்தவர் எல்லையம்மாள்(50). நேற்று முந்தினம் மாலை எல்லையம்மாள் வீட்டிற்கு அவரது தம்பி மனைவி சரோஜா சென்றார். அப்போது வீட்டில் ரத்த வெள்ளத்தில் எல்லையம்மாள் (ம) அவரது மகள் சுசிதா(13) இருவரும் இரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.