India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரங்கு கல்மேட்டில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் சாந்தகுமாரி தலைமையில் தேர்தல் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது. அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் உரிய ஆவணமின்றி ஆட்டு வியாபாரி சங்கர் என்பவர் எடுத்துச் சென்ற 1,29,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியரகத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் ஸ்டீபன் (25). இவரும், பிரவீன் பால்ராஜ் (25) என்பவரும் நேற்று முன்தினம் டூவீலரில் சென்றபோது தேன்கனிக்கோட்டை பகுதியில் அவ்வழியாக சஞ்சய் (22) என்பவர் ஓட்டிவந்த டூவீலர் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி ஸ்டீபன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சஞ்சய் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்தார். பிரவீன் பால்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி முகாம் இன்று ( ஏப்ரல் 1) தொடங்கியது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி மாவட்ட பிரிவின் கீழ், நீச்சல் கற்றுக் கொள்வதற்கான பயிற்சி முகாம் இன்று முதல் ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமிற்கு ரூ. 1,770 கட்டணம் ஆகும். மேலும் விவரங்களுக்கு 74017 03487 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.
தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின்போது காரில் 10 லட்சம் ரூபாய் சிக்கிய நிலையை வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பெயரில் ஓசூரில் பிரஷர் லோகேஷ் குமார் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பல மணி நேரம் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு லோகேஷ் குமார் வீட்டில் இருந்து 100 பவுன் தங்க நகை மற்றும் 1.2 கோடி பணம் பறிமுதல் செய்து அதிகரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில மாதங்களாக அந்த பகுதிகளில் மழை பொய்த்ததால், தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மா மரங்கள் காய்ந்து வருவதால் மா செடிகளை காக்க ஜெகநாதபுரம் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி, டிராக்டர் மூலம் கொண்டு வந்து மா செடிகளுக்கு தண்ணீா் ஊற்றி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (மார்ச் 31) மாலை அலேசீபம் பகுதியில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் கலந்துகொண்டு கழக நிர்வாகிகளிடையே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்டம் அதகப்பாடி அடுத்த ஏ.செக்காரப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (34), விவசாயி. இவர் நேற்று முன் தினம் இரவு டூவீலரில் கிருஷ்ணகிரி- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் பையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாண்டியன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி, சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெள்ளகுட்டை பகுதியில் அனுமதி இன்றி பெட்டிக்கடை சுவற்றில் இரட்டை இலை சின்னம் வரைந்ததாக திருமூர்த்தி என்பவரும், குருகப்பட்டி பகுதியில் அனுமதியின்றி கைச்சின்னம் வரைந்ததாக தமிழ்வாணன் என்பவர் மீதும் தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வாகன ஓட்டிகள் பிரிவு சாலை இல்லாத பகுதிகளில் நேரடியாக சர்வீஸ் சாலைக்கு வாகனங்களை இறக்கி வருகின்றனர். இதனால் பிரிவு சாலையில் வரும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயத்தில் உள்ளனர். இது குறித்து நெடுஞ்சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து விபத்தை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் நேற்று தருமபுரி மாவட்டத்தில் வருகை புரிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கோபிநாத் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டி பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டனர். இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.