Krishnagiri

News October 10, 2024

கிருஷ்ணகிரி இளைஞர்கள் கவனத்திற்கு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இளம் பட்டதாரிகள் மற்றும் தொழில் முனைவோர் ஓராண்டு புத்தாக்கம் சான்றிதழ் படிப்பிற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வகுப்புகள் வரும் நவம்பர் 4ம் தேதி தொடங்க உள்ளது. மேலும்
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
சிவபாரத் 8680802707, 8668107552,
8668101638 என்ற எண்ணில் அழைத்து விவரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

News October 10, 2024

கிருஷ்னகிரியில் இயற்க்கை பேரிடரை முன்கூட்டி அறிய புதிய செயலி

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரை உள்ள நிலையில் மழை,வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் நிகழ்வுகளை தெரிந்துகொள்ள தமிழக அரசு TN-Alert என்ற இணையதள செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் வானிலை முன் அறிவிப்பு,தினசரி பெறப்பட்ட மழையளவு, நீர்த்தேக்கங்களின் தற்போது நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

News October 9, 2024

நியாய விலை கடைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க நியாயவிலை கடைகளுக்கு விற்பனையாளர்கள் பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்கான தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.drbkrishnagiri.net என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க 07.11.2024 பிற்பகல் 5.45மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 117காலி பணியிடங்கள் உள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News October 9, 2024

அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு போட்டி

image

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ம் நாளை இளைஞர் எழுச்சி நாளாக தமிழகமெங்கும் கொண்டாட தமிழக அரசு தெரிவித்துள்ளதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அக் 9 முதல் 15ம் தேதி வரை அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களிடையே கட்டுரை, பேச்சு, அறிவியல் கண்காட்சி போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளதாக ஆட்சியர் சரயு அறிவித்துள்ளார்.

News October 8, 2024

கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் நியமனம்

image

தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் மாற்றம் ஏற்பட்ட பின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி நியமிக்கப்பட்டுள்ளார்.

News October 8, 2024

பர்கூர் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க பர்கூர் பேரூராட்சியில் மாநிலங்களவை உறுப்பினரும் கொள்கை பரப்புச் செயலாளருமான மு.தம்பிதுரை தலைமையில் சொத்து வரி, பேருந்து கட்டணம், ஆவின், மின்சார கட்டணம் உயர்வு ஆகியவற்றை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

News October 8, 2024

இயற்கை பேரிடர்களை தடுக்க நடைபயணம் மேற்கொண்டுள்ள பெண்

image

ஓசூர் அருகே பாகலூரைச் சேர்ந்தவர் சிவஜோதி (42). இயற்கை ஆர்வலரான இவர் பாகலூரில் இருந்து சென்னை நோக்கி ‘எமர்ஜென்சி ஃபார் எ நியூ பிரீட்’ என்ற எழுத்துக்களைக் கொண்ட பதாகை ஒன்றை கையில் ஏந்தியபடி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இயற்கை பேரிடர் மற்றும் சென்னை பெருவெள்ளம் போன்றவற்றை தடுக்க தன்னிடம் தீர்வு உள்ளதாக கூறி அவர் முதல்வரை பார்க்க செல்வதாக கூறியுள்ளார்.

News October 8, 2024

பள்ளிக்கல்வி பணியாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

image

கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அனைத்து நிலை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பகுதி நேர சிறப்பாசிரியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது செப்டம்பர் மாத சம்பளத்தை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். மாநில அரசு, சம்பளம் பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

News October 8, 2024

கிருஷ்ணகிரியில் 8 பேரின் குடும்பத்திற்கு ரூ. 17 லட்சம் நிதி

image

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது. இதில், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் சாலை விபத்துகளில் உயிர் இழந்த 4 பேரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் மதிப்பிலும், தண்ணீரில் மூழ்கி இறந்த 4 பேரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் என முதல்அமைச்சரின் பொது நிவாரண உதவி தொகையில் இருந்து ரூ.17 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

News October 7, 2024

சூளகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து

image

சூளகிரி அருகே நேற்று மாலை சப்படி பகுதியில் அடுத்தடுத்து வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்றாக 3க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக்கொண்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.