India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் காலியாக உள்ள இன்ஜினியரிங் கிராஜூவேட் 458, டெக்னீசியன் 561, இன்ஜினியரிங் அல்லாத பிரிவு 569 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ / பி.ஏ., / பி.எஸ்சி., / பி.காம்., படித்தவர்கள் இந்த <
கிருஷ்ணகிரி: பாஞ்சாலியூர் அருகே எல்லம்மாள், மகள் சுசிதா கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 17 வயது சிறுவன், சத்தியரசு, நவீன்குமார் ஆகிய மூவரை கைது செய்தனர். எல்லாமாளிடம் சத்தியரசு ரூ.10,000 வட்டிக்கு வாங்கிய நிலையில், அதை திருப்பி கொடுக்காததால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்துள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பத்தின் போது திருடப்பட்ட 10 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
சூளகிரி அருகே உள்ள கங்கசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் அமரேசன்(30). இவர் தனியார் தொழிற்சாலையில் வேலைப்பார்த்து வந்தநிலையில், இவரது ஊருக்கு அருகே உள்ள காருபலா என்னும் கிராமத்தில் உள்ள மதுபான கடைக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் நேற்று மதுபான கடைக்கு பின்புறம் அமரேசனை மர்மநபர்கள் தென்னை மட்டை, உருட்டு கட்டைகளால் அடித்துக்கொலை செய்துள்ளனர். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் 2024–25 நிதியாண்டில் இந்தியாவின் சிறந்த 10 மாவட்டங்களில் 5வது இடத்தை பிடித்து அசுர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மாவட்டத்தின் ஆட்டோமொபைல் துறையின் ஏற்றுமதிகள் 6047.79 கோடி ரூபாய் ($0.665 பில்லியன்) ஆகும். இதனால் கிருஷ்ணகிரியின் தொழில்துறை மற்றும் வருமான வளர்ச்சி உச்சத்தை அடைந்துள்ளது. *இந்த செய்தியை உங்க பகுதி மக்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (செ.29) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செ.29) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரி அருகே பாஞ்சாலியூரில் கடந்த 26ஆம் தேதி நிகழ்ந்த தாய், மகள் இரட்டை கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட எல்லம்மாளிடம் ரூ.10,000 கடன் வாங்கி ரூ.3,000 செலுத்திய நிலையில், மீதி பணத்தை கேட்டதால் கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக நவீன்குமார், சத்தியரசு மற்றும் சிறுவனை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 10 சவரன் நகையை மீட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (செப். 29) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோபு உள்ளிட்ட பல அதிகாரிகள் உடனிருந்தனர்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில், தனியார் பள்ளி மாணவி சாய்பிரியா, குண்டு எறிதல் மற்றும் தட்டு எறிதல் பிரிவுகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்குப் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டன. இதன் மூலம் அவர் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.
கிருஷ்ணகிரி மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுதல், சொத்து வரி செலுத்துதல் உள்ளிட்ட 32 சேவைகள் இனி உங்கள் உள்ளங்கையில். அரசின் சேவைகளுக்கு இனி நீங்கள் எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் ஒரே வாட்ஸ் அப் எண்ணில் கிடைக்கும் . 9445061913 என்ற எண்ணிற்கு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ என மெசேஜ் அனுப்பினால் போதும். நல்ல தகவல்களை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.