India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில் <
காவல்துறையினர் நியாயமற்ற சோதனை, பறிமுதல், தாக்குதல், வாய்வழி துன்புறுத்தல்&தொல்லை, சட்ட விரோத கைது& தடுப்புக்காவல், முறையான நடைமுறைகளை பின்பற்றத் தவறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனித உரிமைகள் ஆணையம்/காவல் கண்காணிப்பாளர்/ மஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கலாம். புகார் செய்யும் போது சாட்சி கணக்குகள், மருத்துவ பதிவுகள் (காயமடைந்திருந்தால்), வீடியோ பதிவுகள் (இருந்தால்) புகைப்படங்கள் தேவை.
IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து இன்று முதல் ( மே.08) வரும் 20.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிராதீங்க. வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.
+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (மே.1) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை சாலையில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டல அலுவலகம், கிருஷ்ணகிரி கிளை சார்பில் தொழிலாளர் தினம் கொண்டாட்டம் நடைபெற்றது. LPF தொழில் சங்கம் நிர்வாகிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் இணைந்து தொழிலாளர் கொண்டாடினர். கொடி ஏற்றி மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள கிராமத்தார் மற்றும் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்துவரும் தகுதியான நபர்களுக்கு, வீட்டு மனைப்பட்டா பெறுவதற்காக நாளை (மே.2) அனைத்து வருவாய் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா பெற விண்ணப்பித்து பயன்பெற திமுக மா. செயலாளர் எம்எல்ஏ மதியழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
▶️கிருஷ்ணகிரி SP தங்கதுரை- 9498157778,
▶️ADSP நமசிவாயம்- 8300037300,
▶️கிருஷ்ணகிரி DSP -9443779617
▶️பர்கூர் DSP – 8123951907,
▶️தேன்கனிக்கோட்டை DSP – 9498170606,
▶️ஓசூர் DSP – 8007506059,
▶️ஊத்தங்கரை DSP – 9443426675
குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
மேல்சோமார்பேட்டையை சோ்ந்தவர் சஞ்சய் (17). இவா் மோட்டாா் சைக்கிளில் கிருஷ்ணகிரி – ஒசூா் தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையில் சென்றார். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சஞ்சயை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பினா். ஆனால் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேல்சோமார்பேட்டையை சோ்ந்தவர் சஞ்சய் (17). இவா் மோட்டாா் சைக்கிளில் கிருஷ்ணகிரி – ஒசூா் தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையில் சென்றார். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சஞ்சயை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பினா். ஆனால் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.