India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரியமலைக்கோட்டை என்பது ஒருங்கிணைந்த தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 12 முக்கிய கோட்டைகளில் ஒன்றாகும். இம்மலைக்கோட்டையில் உள்ள பெருமாளை மக்கள் புரட்டாசி மாதம் விரதம் இருந்து வழிபடுவர். மேலும் விரத நாட்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தலை முடியை காணிக்கையாக அளித்தும், உண்டியல் காணிக்கை இட்டும் பெருமாளை வழிபடுவர்.
1947 முதல் 80 ஆண்டுகளாக கிருஷ்ணகிரிக்கு ரயில் பாதை வேண்டுமென மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் பெரும்பான்மையான ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. இப்படி இருந்தும் சென்னை, சேலம், பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் கிருஷ்ணகிரிக்கு எப்போது ரயில்பாதை வரும் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
சூளகிரி வட்டம் இம்மிடிநாயக்கனப்பள்ளி ஊராட்சி, கும்மனுார் அருகே இன்று காலை ஒற்றை யானை தாக்கி காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் வனக்காவலர் நரசிம்மனை, கலெக்டர் சரயு இன்று நேரில் பார்வையிட்டு அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அப்போது அரசுமருத்துவ கல்லுாரி முதல்வர் மரு.பூவதி உள்ளிட்ட பலர் உடை இருந்தனர்.
கிருஷ்ணகிரியில் கடந்த 80 ஆண்டுகளாக ரயில் பயணமே இல்லை. 1998, 2012-ல் மத்திய அரசின் பட்ஜெட்டில், கிருஷ்ணகிரிக்கு ரயில் பாதை வரும் என அறிவிப்பு வந்தது. 2022ஆம் ஆண்டு ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஜோலார்பேட்டைக்கு ரயில் பாதைக்கான திட்ட அறிக்க தயார் செய்ய ரூ.2.45 கோடியை மத்திய அரசு ஒதுக்கியும் பலனில்லை. இந்த நிதியாண்டிலும் ரயில் பற்றிய தகவல் இல்லாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஓசூரில் 13-வது புத்தகத் திருவிழா கடந்த 12-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில் கடந்தாண்டு ரூ.75 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு ரூ.85 லட்சத்துக்கு விற்பனையானது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகம் விற்பனையானதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் உலகின் முன்னணி பேட்டரி நிறுவனமான LOHUM ரூ.2000 கோடியில் இந்தியாவின் மிகப்பெரிய பேட்டரி தொழிற்சாலை மத்தூரில் அமைக்கயுள்ளது. இந்த தொழிற்சாலை 65 ஏக்கர் பரப்பளவில் அமையும் இந்த ஆலையில், 18 மாதங்களில் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொழில் செய்ய மாநில அரசு உறுதுணையாக இருப்பதாகவும் அந்நிறுவனத்தின் அதிகாரி சச்சின் மகேஸ்வரி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை(ஜூலை 26) காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது. இச்சிறப்பு வேலைவாய்ப்பு
முகாமில் பிரபல தனியார் நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய
உள்ளனர்.இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
தேன்கனிக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் முதற்கட்ட சேர்க்கை நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்டமாக ஜூலை 31ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்காலத்தில் உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.750 மற்றும் விலையில்லா பாடப்புத்தகம், வரைபடகருவி, சீருடை, மிதிவண்டி, மடிக்கணினி, மூடுகாலணி (ஷூ) ஆகியவை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் ராயக்கோட்டை மேம்பாலம் எதிரே உள்ள விநாயகா ஹாலில் ஒருங்கிணைந்த மாவட்ட பொருப்பாளர் நெப்போலியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் திருமால்வளவன் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணி குறித்து பேசினார். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியில் கடந்த 80 ஆண்டுகளாக ரயில் நிலையமே கிடையாது. சுற்றுவட்டாரத்தில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை, கிரானைட் தொழிற்சாலை, கால்நடைச் சந்தை அதிக அளவில் உள்ளது. இவை அனைத்தையும் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு ஏற்றுமதி செய்ய, சாலைப் போக்குவரத்து மட்டுமே உள்ளது. ரயில் போக்குவரத்தை பயன்படுத்தினால் குறைந்த செலவில் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய முடியும்.
Sorry, no posts matched your criteria.