India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டம் முன்னாள் முப்படை துணை இராணுவ வீரா்கள் சார்பில் நாளை(ஜூலை 28) 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட உள்ளது. இது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆவின் பால் டெய்ரி எதிரில் உள்ள தொன்போஸ்கா மெட்ரிக் பள்ளியில் காலை 10 மணி அளவில் துவங்கப்பட உள்ளது. இவ்விழாவினை கிருஷ்ணகிரி முன்னாள் துணை இராணுவத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி நீர்தேக்க அணை முழுமையாக நிரம்பி வருகிறது. அணையின் முழுக்கொள்ளவான 52 அடிகளில் தற்போது அணை 51அடிகளை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நிரம்பியதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு இன்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், இணை இயக்குநர் பச்சையப்பன் மற்றும் விவசாய பெருமக்கள் உள்ளனர்.
கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், எம். வெள்ளாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியான ரூபாய் மூன்று லட்சத்திற்கான காசோலை கலெக்டர் சரயு இன்று வழங்கினார். அப்போது பருகூர் எம்எல்ஏ உடனிருந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த ஆகாஷ் ஹரி ( 16 வயது) 2018 ல் நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமுற்று அசைவற்ற நிலையில் வசித்து வருகிறார். அச்சிறுவனும் அவரின் தாயும் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்தனர். சிகிச்சைக்கு உதவிட சிறுவனின் தாய் கோரினார். எனவே உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது பெய்த லேசான மழையால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கே.ஆர்.பி.அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியது. இன்று நீர்மட்டம், 51அடியை எட்ட உள்ளது. அதன்பிறகு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரில் நாளை காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் மாநில, மாவட்ட நிா்வாகிகள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள், கட்சியின் மூத்த நிா்வாகிகள்,பொறுப்பாளா்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரியில் தமிழக அரசு மின் கட்டண உயர்வு செய்ததை கண்டித்தும், நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட தேமுதிகவினர், பதாகைகளை கையில் ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
பெரியமலைக்கோட்டை என்பது ஒருங்கிணைந்த தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 12 முக்கிய கோட்டைகளில் ஒன்றாகும். இம்மலைக்கோட்டையில் உள்ள பெருமாளை மக்கள் புரட்டாசி மாதம் விரதம் இருந்து வழிபடுவர். மேலும் விரத நாட்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தலை முடியை காணிக்கையாக அளித்தும், உண்டியல் காணிக்கை இட்டும் பெருமாளை வழிபடுவர்.
1947 முதல் 80 ஆண்டுகளாக கிருஷ்ணகிரிக்கு ரயில் பாதை வேண்டுமென மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் பெரும்பான்மையான ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. இப்படி இருந்தும் சென்னை, சேலம், பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் கிருஷ்ணகிரிக்கு எப்போது ரயில்பாதை வரும் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
Sorry, no posts matched your criteria.