Krishnagiri

News March 20, 2025

ரசாயன ஊசி செலுத்தப்பட்ட 6 டன் தர்பூசணி பறிமுதல்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் ரசாயன ஊசி செலுத்தப்பட்ட தர்பூசணி பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 9 இடங்களில் சோதனை மேற்கொண்ட உணவுத்துறை அதிகாரிகள் 6 இடங்களில் சுமார் 6 டன் தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், உள்புறம் சிவப்பாக இருப்பதற்காக ஊசி செலுத்தப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 20, 2025

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் ஒரு பிரிவான இந்திய அஞ்சல் கட்டண வங்கியில், காலியாக உள்ள 51 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் நாளைக்குள் (மார்ச்.21) <>இந்த லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். வயது 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும். ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 20, 2025

பற்றியெரிந்த வீடு, மூதாட்டி பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் அட்டகுறுக்கி கிராமத்தில் நேற்று, திருப்பதிநாயுடு மனைவி நாகம்மாள்(75) என்பவரது ஓட்டு வீடு முழுவதும் தீப்பற்றியது. அதில் நாகம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். VAO முருகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News March 20, 2025

மாணவியிடம் சில்மிஷம், ஆசிரியர் போக்சோவில் கைது

image

கிருஷ்ணகிரி அருகே, தேர்வு எழுத சென்ற பிளஸ் 2 மாணவியிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர், போக்சோவில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து புகாரின்பேரில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சரவணன் விசாரணை நடத்தினர். அதில், தேர்வு எழுதிய மாணவியிடம் ஆசிரியர் ரமேஷ், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், அதே அறையில் மற்றொரு மாணவியிடமும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரிந்தது.

News March 19, 2025

பிரமிக்க வைக்கும் மல்லப்ப கொண்டா கோயில்

image

நீங்கள் மேலே காணும் புகைப்படத்தில் உள்ள கோயில் அமர்நாத் கோவிலோ, வட மாநிலத்திலோ அல்ல. கிருஷ்ணகிரியில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்லப்ப கொண்டா கோயில் தான். இந்த மல்லப்ப கொண்டா மலையின் வியூ பாய்ண்டுகளையும், அங்கு அமைந்திருக்கும் மிகப்பிரமாண்டமான மல்லேஸ்வர சுவாமியை தரிசிக்க குடும்பத்துடன் காலை வேளையை தேர்வு செய்தால் குழந்தைகளுடன் மூணாறுக்கு சென்ற அனுபவத்தை பெறலாம். ஷேர் பண்ணுங்க

News March 19, 2025

பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது

image

பர்கூர் அருகே திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவி நேற்று கிருஷ்ணகிரி – தி.மலை சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் தேர்வு எழுத சென்றுள்ளார். அப்போது அந்த அறையின் மேற்பார்வையாளராக பணியாற்றிய ரமேஷ்(44) மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் ரமேஷை இன்று போக்சோவில் கைது செய்துள்ளனர்.

News March 19, 2025

8th Pass செய்திருந்தால் போதும்! ரூ.14,970 சம்பளத்தில் அரசு வேலை…

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.18 வயது 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம் கிடையாது.நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். <>இந்த<<>> விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இதில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு மார்ச்.24க்குள் அனுப்ப வேண்டும்.

News March 19, 2025

கிருஷ்ணகிரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் மார்.21ம் அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

News March 19, 2025

ஓசூரில் தேனீக்கள் கொட்டி முதியவர் பலி

image

தருமபுரி தாசரஅள்ளி பகுதியை சேர்ந்த 75 வயதான வெங்கடேசன், ஓசூர் மலைக்கோவில் அருகே தேர்த் திருவிழாவில் கடை அமைத்து விற்பனை செய்து வந்தார். அப்போது மரத்தில் இருந்த தேனீக்கள் தாக்கியதால் காயம் அடைந்தார். ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 18, 2025

கிருஷ்ணகிரியில் 2,000 ஆண்டுகள் பழமையான ஓவியம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, கிருஷ்ணகிரி மலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மலையின் மேற்குப் பகுதியில் 50 அடி உயரத்தில் 80 அடி நீளமான பாறையின் அடியில், மனிதன் தங்கிய அடையாளமாகப் பழமையான வெண் சாந்து பாறை ஓவியங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். இவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஓவியங்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!