Krishnagiri

News June 13, 2024

கிருஷ்ணகிரி: மாபெரும் தர்ணா போராட்டத்திற்கு அழைப்பு

image

காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் முதலுதவி சிகிச்சைப் பிரிவை நிறுத்தியதை தொடர்ந்து மீண்டும் அதனைச் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக இன்று (ஜூன் 13) காலை காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனை முன்பு மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. அதுசமயம் சங்கத்தினர் அனைவரும் கலந்துகொள்ளுமாறு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News June 12, 2024

காவேரிப்பட்டிணம் பகுதியில் தக்காளி விலை உச்சம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பகுதியில் தொடர் கனமழையின் எதிரொலியாக தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை ஏற்றத்தை சந்தித்துள்ளது. அதன்படி 20 கிலோ கொள்ளளவு கொண்ட ஒரு கிரேட் தக்காளி பழம் 1200 முதல் 1500 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தை விட ஒரு கிலோ தக்காளி மீது 20 ரூபாய் விலையேற்றம் அடைந்துள்ளது.

News June 12, 2024

அஞ்செட்டி பகுதிகளில் மழை: தோன்றி வானவில்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில், இன்று காலையிலிருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். மேலும், இந்த மழையினால் திடீரென வானில், வானவில் தோன்றியது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

News June 12, 2024

ஒசூர் அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

ஒசூர் நரசிம்மா காலனி பகுதியை சேர்ந்த அனில்குமார் (48) சிப்காட் பகுதியில் தனியார் கிரானைட் விற்பனை பிரிவு மேலாளராக உள்ளார். நேற்று அவர் தொழில் நிமித்தமாக பெங்களூரு சென்று விட்டு மீண்டும் ஒசூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியதில் அனில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் ஓசூர் அட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.

News June 12, 2024

கிருஷ்ணகிரி அருகே மாணவி தற்கொலை

image

மகராஜகடை அருகே தங்கடிகுப்பத்தை சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மகள் கீர்த்தனா (15) பத்தாம் வகுப்பு முடித்துள்ளார். சமீபத்தில் வந்த தேர்வு முடிவில் கீர்த்தனா தமிழில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தார். இதில் மனமுடைந்த அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தனா நேற்று இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News June 12, 2024

கிருஷ்ணகிரி: போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு

image

பையூரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பாஜக தலைவரை அவமதித்து அவருக்கு கொலை மிரட்டல் விடும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டின் தலையை திமுகவினர் துண்டித்ததாக கூறி புகார் மனு அளிக்கப்பட்டது. இதன் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து, காவேரிப்பட்டணத்தில் பாஜகவினா் மேற்கொள்ளவிருந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

News June 11, 2024

வெகு சிறப்பாக தொடங்கிய பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா

image

போச்சம்பள்ளி அடுத்த கோடி புதூர் பகுதியில் எழுந்தருளியுள்ள பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவிலில் இன்று மஹாமுரசனுக்கு கண் திறப்புடன் வெகு சிறப்பாக தொடங்கியது திருவிழா. விழாவின் முக்கியமான பரணை ஏறுதல் நிகழ்வு ஜூன் 12-ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. அது சமயம் மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் அனைவரும் நாளை கலந்து கொள்ள நிர்வாக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News June 11, 2024

கிருஷ்ணகிரி: அரசு பஸ் மோதி வாலிபர் பலி

image

ஓசூர் அலசநத்தம் சாலை பகுதியை சேர்ந்தவர் அருண் (30). இவர் டூவீலரில் ஒசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே சம்பவம் அன்று மாலை சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அருணை அங்கிருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News June 11, 2024

கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து சரிவு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மிமீ): பெணுகொண்டாபுரம் 16.2, போச்சம்பள்ளி 8.5, கேஆர்பி டேம் 6.6 என மொத்தம் 31.3 மிமீ மழை பதிவாகி உள்ளது. கேஆர்பி அணைக்கு நேற்று முன்தினம் 397 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 350 கனஅடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 111கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

News June 10, 2024

கிருஷ்ணகிரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவடைந்தது. இந்த நிலையில் வழக்கம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ.ஆ.ப., தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

error: Content is protected !!