Krishnagiri

News June 18, 2024

கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் நின்றுள்ளது. இந்நிலையில், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் தென்பெண்ணையில் திறந்துவிடப்படுவதால், கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 328 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 46.85 அடியாக தற்போது உள்ளது.

News June 18, 2024

கிருஷ்ணகிரி: காய்கறி விலை உயர்வு

image

கிருஷ்ணகிரி: தொடர்மழையால் காய்கறி விளைச்சல் குறைந்து விட்டதால், மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் காய்கறி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தக்காளி கிலோ ₹20ஆக இருந்தது, தற்போது ₹40ஆக உயர்ந்துள்ளது. கத்தரிக்காய் ₹28ல் இருந்து ₹30 ஆகவும், பீன்ஸ் ₹100ல் இருந்து ₹140 ஆகவும், இதேபோல் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

News June 17, 2024

கிரானைட் கடத்தி வந்த லாரி பறிமுதல்

image

ராயக்கோட்டை- தர்மபுரி ரோட்டில் ஒடையாண்டஅள்ளி தக்காளி மண்டி அருகே சுரங்கத்துறை தனி துணை வட்டாட்சியர் கோகுலகண்ணன் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது 2 கிரானைட் கற்களை அரசு அனுமதியின்றி பட்டபகலில் ஏற்றி வந்த லாரியை நிறுத்தியபோது டிரைவர் தப்பி ஓடியுள்ளார். ராயக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அங்கு விரைந்து லாரியை பறிமுதல் செய்தனர்.

News June 17, 2024

கிருஷ்ணகிரி அருகே நள்ளிரவில் பயங்கரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. துரைஷ் மஹால் அருகில் உள்ள துணிக்கடையில் நள்ளிரவில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்க தீயணைப்பு வாகனம் கடுமையாக போராடியது. இரவு நேரம் என்பதால் வானம் சிவப்பு நிறத்தில் காட்சி அளித்தது. மேலும் இந்த தீ விபத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் நாசமானதாக கூறப்படுகின்றது.

News June 17, 2024

கிருஷ்ணகிரி: நர்சிங் மாணவி தற்கொலை

image

ஓசூர் அருகே உள்ள பஞ்சாட்சிபுரம் அடுத்த முதுகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருடைய 18 வயது மகள் தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் 2ம் ஆண்டு படித்து வந்தார். சற்று மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மனமுடைந்த அவர் வீட்டில் கடந்த 15ஆம் தேதி அன்று இரவு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News June 16, 2024

வழக்கமான இடத்திலேயே மாங்கனி கண்காட்சி

image

கிருஷ்ணகிரி நகர்மன்ற கூட்டம், தலைவர் பரிதாநவாப் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆணையாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சியினை வழக்கமாக நடைபெறும் ஆண்கள்மேல்நிலைபள்ளி மைதானத்திலேயே நடத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News June 16, 2024

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி

image

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம் கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நபார்டு மைராடா நீர்வடிப்பகுதி திட்டத்தின் கீழ், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி மற்றும் நிலைத்த விவசாயத்திற்கான தொழில் முனைவு மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. மைராடா தொண்டு நிறுவனத்தின் திட்ட அலுவலர்முருகன்,எத்திராஜ், கெம்பம்மாள், தலைமை ஆசிரியர் வீரமணி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

News June 15, 2024

கிருஷ்ணகிரி: மாணவனுக்கு பாலியல் தொல்லை

image

ஊத்தங்கரை அடுத்தள்ள பாவக்கலை சேர்ந்தவர் பார்த்திபன் (37), டெய்லர் கடை வைத்துள்ளார். இவருடைய கடைக்கு மாற்றுத்திறனாளியான பிளஸ் 2 மாணவன் ஒருவர் தனது பழைய துணி தைக்க சென்றபோது பார்த்திபன் அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து பார்த்திபனை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News June 15, 2024

கிருஷ்ணகிரி: உப்பு, மிளகு தூவி நேர்த்திக்கடன்

image

ஊத்தங்கரை புனித அந்தோணியார் ஆலய 54ஆம் ஆண்டு தோ்த் திருவிழா நேற்று நடந்தது. கொடி ஏற்றத்துடன் தொடங்கிய தோ்த் திருவிழாவில் இறுதிநாள் இரவு திருத்தோ் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. வாண வேடிக்கையுடன் தொடங்கிய புனித அந்தோணியாரின் அலங்கரிக்கப்பட்ட தோ் பவனியை பங்குத்தந்தை புனித நீா் தெளித்து தொடங்கி வைத்தார். தேரின் மீது பக்தா்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தூவி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினர்.

News June 14, 2024

அரசு மருத்துவமனைக்கு படையெடுக்கும் மக்கள்: 51 பேர் பாதிப்பு

image

ஒசூர் அருகே சின்ன எலசகிரி பகுதியில் நேற்று வயிற்றுப்போக்கு, மயக்கம், வாந்தி என 27 பேர் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக இன்று குழந்தைகள் உட்பட 24 பேர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் ஒசூர் பகுதி மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!