Krishnagiri

News July 8, 2025

தேன்கனிக்கோட்டை பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல்

image

தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 10 வயதுடைய 5-ம் வகுப்பு மாணவி பள்ளி தலைமை ஆசிரியர் சாரதி, தன்னை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியரை கைது செய்தனர்.

News July 8, 2025

அரசு பள்ளிக்கு விருது வழங்கிய அமைச்சர்

image

கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கல்வி, விளையாட்டு, மாணவர் மேம்பாடு, பள்ளி கட்டமைப்பு, பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடு உள்ளிட்ட அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியது. இதனால் தமிழ்நாடு அரசு மாவட்ட அளவில் சிறந்த தொடக்கப்பள்ளிக்கான பிரிவில் அறிஞர்அண்ணா தலைமைத்துவ விருதினையும், பரிசுத் தொகையாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினையும் அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.

News July 7, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்.

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ( ஜூலை 7) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News July 7, 2025

கிருஷ்ணகிரி: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

image

கிருஷ்ணகிரி மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <>AAVOT.COM<<>> என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம். (அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க கண்டிப்பாக உதவும்

News July 7, 2025

10th முடித்தால் போதும் கடற்படையில் வேலை

image

இந்திய கடற்படையில் உள்ள குரூப்.பி மற்றும் குரூப்-சி பிரிவில் உள்ள சார்ஜ்மேன், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,097 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது 18 முதல் 45 வரை இருக்கலாம். 10th முதல் பொறியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் 18,000- 1,42,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூலை 18க்குள் <>இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News July 7, 2025

ரூ.5 லட்சம் காப்பீட்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்

image

தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. வருமான சான்று, ரேஷன் கார்டு, அடையாள சான்று, முகவரி சான்று, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்கள் மற்றும் <>இந்த லிங்கி<<>>ல் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மையத்தில் கொடுக்க வேண்டும். உடனே காப்பீடு அட்டை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News July 7, 2025

ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம்

image

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<>மருத்துவமனை பட்டியல்<<>>) மேலும் தகவல்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட அதிகாரிகள் ( 7373004331 ) அல்லது உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.<<16974310>> தொடர்ச்சி<<>>

News July 7, 2025

கிருஷ்ணகிரி நாளை மின் தடை 2/2

image

முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை ஆகிய இடங்களில் நாளை(ஜூலை.08) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. எனவே வீட்டு வேலைகளை அதன்படி மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் பகுதி மக்களுக்கு இந்த செய்தியை தெரியப்படுத்துங்க

News July 7, 2025

கிருஷ்ணகிரியில் நாளை மின் தடை 1/2

image

கிருஷ்ணகிரியில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக முக்கிய இடங்களில் நாளை (ஜுலை.08) மின் தடை ஏற்பட உள்ளது. அதன்படி போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை. பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், <<16972858>>தொடர்ச்சி<<>> ஷேர் பண்ணுங்க

News July 7, 2025

சாலையில் பயங்கர விபத்து

image

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி பகுதியிலிருந்து காவேரிப்பட்டிணம் செல்லும் சாலை இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் (ஜூலை-6) இரவு 8 மணி அளவில் குடிபோதையில் டாட்டா ஏசி வாகனத்தை இயக்கி வந்த இளைஞர் எதிரே வந்த இரண்டு சக்கர வாகனம் மீது மோதிய பயங்கர விபத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர்களுக்கு கை கால் முடிவு ஏற்பட்டது. விபத்து குறித்து நாகரசம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!