India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் நேற்று குரூப்-1 தேர்வு நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை எழுத 3,953 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், நேற்று நடந்த போட்டி தேர்வை 13 தேர்வு மையங்களில் மொத்தம் 2,498 பேர் எழுதினர். சுமார் 1,455 பேர் தேர்வு எழுத வரவில்லை. தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட ஆட்சியர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஒசூர் அருகே பெலத்தூர் ஊரை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி வினோதம்மா (40). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த குணசேகர் என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வினோதம்மாவின் உடலில் பல்வேறு இடங்களில் குணசேகர் கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு ஒசூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 90 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு இன்று அனைத்து
மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. அதன்படி, கிருஷ்ண்கிரி மாவட்டத்தில் காலை 9 மணிக்குள் தேர்வுக் கூடத்திற்குள் வருகை தருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வு கூடங்களில் தேர்வு பணியில் தனிப்படைகள், கண்காணிப்புக் குழுக்கள் ஈடுபடுகின்றன. இதற்காக மாவட்டம் முழுவதும் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒசூரில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை இளைஞர், மாணவர்கள் மத்தியில் ஊக்கப்படுத்தும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புத்தக திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 13ஆவது ஆண்டாக நடைபெறவுள்ள இந்த புத்தகத் திருவிழா, ஓட்டல் ஹில்சில் குளிர்சாதன வசதியுடன் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் சரயு அவர்கள் ரிப்பன் வெட்டி இன்று தொடக்கினார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (12-07-2024) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், 29ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 2 ஆம் தேதி வரை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரசம் செய்து கொள்ள சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் நேரில் ஆஜராக முடியாதவர்கள் காணொளியில் ஆஜராக ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கொண்டப்ப நாயக்கன்பட்டியில் நேற்று ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் தொடங்கப்பட்டது. இதை அடுத்து கிருஷ்ணகிரி, பா்கூா், தளி, ஊத்தங்கரை, சூளகிரி, காவேரிப்பட்டணம், கெலமங்கலம், ஒசூா், வேப்பனப்பள்ளி, மத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஜூலை 30 வரை மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 96 முகாம்கள் நடத்தி, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பர்கூர் அடுத்த வரட்டனப்பள்ளியை சேர்ந்தவர் மகேந்திரன்(39). இதே பகுதியை சேர்ந்தவர் சுந்தர்(50). இவர் நேற்று உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தாயாரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, டூவீலரில் பின் தொடர்ந்துள்ளனர். அப்போது எம்.டி.வி. நகர் அருகே சென்றபோது எதிரே வந்த வேன் மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மகாராஜா கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசு பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் மூப்பு அடிப்படையில் ஒவ்வொரு சுற்றாக பணியிட மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வு வரும் ஜூலை 12ஆம் தேதி நடத்தப்படுகிறது என்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை – 949816889, பர்கூர் – 9498175515, கிருஷ்ணகிரி – 9498178629, ஓசூர் – 9842788031, தேன்கனிக்கோட்டை – 9498166367. பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக மேற்கண்ட எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.