Krishnagiri

News July 19, 2024

மாணவர் சேர்க்கைக்கான 5-ஆம் கட்ட கலந்தாய்வு

image

கிருஷ்ணகிரி அர்சு ஆடவர் கலைக் கல்லூரியில் வரும் 22-ஆம் தேதி மாணவர் சேர்க்கைக்கான 5-ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-25-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலைப் பாடப்பிரிவுகளுக்கு, 5-ஆம் கட்ட கலந்தாய்வு விபரம், www.gacmenkrishnagiri.org என்ற இளைய தளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

News July 18, 2024

10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் ஆறுகளில் நீர் வரத்து அதிகமாகவுள்ளது. பல்வேறு நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

News July 18, 2024

இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரம். ஊத்தங்கரை – 9498127072, பர்கூர் – 9498106530, கிருஷ்ணகிரி – 9498102065, ஓசூர் – 9498185796, தேன்கனிக்கோட்டை – 9498170295. பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News July 18, 2024

கிருஷ்ணகிரியில் இருந்த ரயில் பயணம்?

image

திருப்பத்தூரிலிருந்து பர்கூர், கந்திலி வழியாக கிருஷ்ணகிரி வரை ரயில் பயன்பாடு இருந்ததை பெரும்பாலானோர் அறிய வாய்ப்பில்லை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வருவாய் பிரச்சனை காரணமாகவும், சுதந்திரப் போராட்ட எழுச்சி காரணமாகவும் 1942ஆம் ஆண்டு இந்த ரயில் வழித்தடம் நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று வரை கிருஷ்ணகிரியில் ரயில் பயணமே கிடையாது

News July 18, 2024

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி விவசாயி மரணம்

image

ஒசூர் அடுத்த தளி அருகே பனசமான தொட்டி கிராமத்தில் யானை மிதித்து விவசாயி பரமேஸ்வரன் (40) உயிரிழந்தார். தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாயி பரமேஸ்வரனை யானை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

News July 18, 2024

TNPSC: நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்

image

TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 18, 2024

கிருஷ்ணகிரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. பள்ளிப்படிப்பு முதல் பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு ஆட்கள் தேவை என தனியார் துறை நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News July 17, 2024

இரவு 10 மணி வரை மிதமான மழை

image

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளது.

News July 17, 2024

இன்று இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து காவலர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை – 9498168889, பர்கூர் – 9498169188, கிருஷ்னகிரி – 9444602727, ஓசூர் – 9842788031, தேன்கனிக்கோட்டை – 9498175188. பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News July 17, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக பல்வேறு நீர்நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

error: Content is protected !!