Krishnagiri

News July 23, 2024

மத்திய பட்ஜெட் ஏமாற்றத்தில் கிருஷ்ணகிரி மக்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் 82 ஆண்டுக்கால தொடர் போராட்டம் மற்றும் கோரிக்கையான ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரயில் பாதை திட்டம் பற்றி மத்திய பட்ஜெட்டில் இந்த முறையும் எந்த அறிவிப்பும் இல்லாததால் வணிகர்கள், தொழில்முனைவோர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஏமாற்றம் அடைந்து இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

News July 23, 2024

கிருஷ்ணகிரி மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா ?

image

2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ளார். இதில் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் 70 ஆண்டு கால கோரிக்கையாக உள்ள ரயில் நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாக வேண்டும், ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும், மாம்பழச்சாறு குளிர்விக்க குளிர்சாதன கிடங்கு அமைக்கப்பட வேண்டும் போன்றவை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. உங்களின் எதிர்பார்ப்பு என்ன?

News July 23, 2024

தாட்கோ வாகனம் ஏலம் ஆட்சியர் அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த TN-
24-A-6919 Bolero LX வாகனம் ஜூலை 29ஆம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண் 132 இல் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜூலை 26ஆம் தேதிக்குள் ரூ. 5000 வைப்பு செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ள ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 23, 2024

 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கிய ஆட்சியர்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.84 ஆயிரத்து 305 மதிப்பில் சக்கர நாற்காலிகள், செயற்கை கால்கள், பிரைலி வாட்ச்கள் மற்றும் ஊன்று கோல்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  கே.எம்.சரயு நேற்று வழங்கினார். உடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

News July 23, 2024

வங்கதேசத்திலிருந்து கிருஷ்ணகிரி திரும்பிய மாணவிகள்

image

வங்கதேசத்திலிருந்து பலத்த ராணுவப் பாதுகாப்புடன் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு கிருஷ்ணகிரி திரும்பிய மாணவிகள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனா் . இதில் கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகரைச் சோ்ந்த பிரீதா ஸ்ரீநிதி, ஆலம்பட்டியை தக்சண்யா உள்பட 12 பேர் மீட்கப்பட்டனர். தமிழகத்தை சோ்ந்த 49 மாணவ மாணவிகள் தமிழக அரசின் நடவடிக்கையால் பாதுகாப்புடன் மீட்கப்பட்டு வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கத்கது .

News July 23, 2024

ஒசூா் மாநகராட்சிக்கு புதிய ஆணையர்

image

ஒசூா் மாநகராட்சியில் கடும் குடிநீா் பிரச்னை இருந்து வந்த நிலையில் அதற்கு தீா்வு காண எந்தவித நடவடிக்கையும் ஆணையா் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தலைமை செயலகத்தில் அவர் மீது புகார் மனு அனுப்பியிருந்த நிலையில்
ஒசூா் மாநகராட்சி ஆணையா் தி.சிநேகா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக ஒசூா் ஆணையராக சென்னை, முதன்மை இணை தோ்தல் அதிகாரியாகப் பணியாற்றிய எச்.எஸ். ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News July 22, 2024

ஓசூருக்கு புது ஆணையாளர்

image

தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஓசூர் மாநகராட்சி ஆணையாராக ஸ்ரீகாந்தை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News July 22, 2024

இந்திய அணியில் நட்ராஜ், கெயிக்வாட் 

image

ஒசூரில் காவேரி மருத்துவமனை சார்பில், தொழிற்நிறுவனங்களுக்கிடையே கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. கிரிக்கெட் வீரர் லட்சுமிபதி பாலாஜி அழைப்பாளராக பங்கேற்று அணிகளுக்கு கோப்பைகளை வழங்கி பாராட்டினார். பின்னர் பேசிய அவர் அணியின் தேர்வு என்பது நம் கையில் இல்லை என்றார்.  நட்ராஜ், கெயிக்வாட் இருவரும் திறமையால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பார் என்றார்.

News July 22, 2024

கிருஷ்ணகிரியில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு

image

2023-24ஆம் கல்வி ஆண்டில் 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, நேற்று கிருஷ்ணகிரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி என மூன்று மையங்களில் மொத்தம் 764 பேர் இந்த தேர்வினை எழுதினர்.

News July 22, 2024

கிருஷ்ணகிரியில் பழங்கால பொருட்கள் கண்டுபிடிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னானூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் 90 செ.மீ. முதல் 108 செ.மீ. வரையிலான ஆழத்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மூன்று பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பானை ஓடுகளில் பெரும்பாலும் ஆள்களின் பெயா் இடம் பெற்றுள்ளன. மேலும், ஒரு பானை ஓட்டில் ஊகூர் என்ற ஊா் பெயா் கிடைத்துள்ளது சிறப்பானது கருதப்படுகிறது என தொல்லியல் துறையினா் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!