Krishnagiri

News September 10, 2024

கிருஷ்ணகிரி வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

கிருஷ்ணகிரி பள்ளி விவகாரத்தில் போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமனுக்கு உதவியதாக ஜிம் மாஸ்டர் டேனியல் அருள்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிகளில் போலியாக என்சிசி முகாம் நடத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன் உட்பட 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான சிவராமன் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News September 10, 2024

கிருஷ்ணகிரி இசைப் பள்ளியில் சேர்க்கைக்கு அழைப்பு

image

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ், கிருஷ்ணகிரியில் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் இருபாலருக்குமான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் பாரம்பரிய கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. சேர்ந்து பயன் பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News September 10, 2024

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து பட்டப்படிப்பு சேராத மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்வதற்கான “உயர்வுக்கு படி” விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு முதல் கட்டமாக இன்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

News September 10, 2024

ஓய்வூதியதாரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அக் 4ஆம் தேதி நடைபெறவிருந்தது. அது ஒத்திவைக்கப்பட்டு அக் 8ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. ஓய்வூதியதாரர்கள் தங்களது மனுக்களை செப் 30க்குள் 2 செட் ஜெராக்ஸ் காப்பியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்படுகிறது.

News September 10, 2024

சாதனை மாணவியை பாராட்டிய கிருஷ்ணகிரி ஆட்சியர்

image

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பாட்மின்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஓசூர் மாணவி நித்யஸ்ரீ சிவனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், நேற்று மாவட்ட ஆட்சியர் சரயு நித்யஸ்ரீ வீட்டிற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

News September 9, 2024

கிருஷ்ணகிரி வழக்கில் என்.சி.சி அலுவலர் பணியிடை நீக்கம்

image

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்த உதவிய என்.சி.சி அலுவலர் கோபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் கைதான நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி முகாம் மூலம் பாலியல் குற்றங்கள் நடந்த நிலையில் அந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

News September 9, 2024

கிருஷ்ணகிரியில் ரூ.49 கோடி கடனுதவி வழங்கிய ஆட்சியர்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு இயக்கம் சார்பாக 709 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 920 பயனாளிகளுக்கு ரூ.46 கோடியே 49 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று வழங்கினார். இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News September 9, 2024

கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு 

image

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வருகின்ற 10.09.2024 முதல் 13.09.2024, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு 17.09.2024 முதல் 24.09.2024, பொது மக்களுக்கான போட்டிகள் 19.09.2024 முதல் 21.09.2024, மாற்றுத் திறனாளிகள் பிரிவு போட்டிகள் 23.09.2024அன்றும், அரசு ஊழியர்களுக்கான போட்டிகள் 24.09.2024 அன்றும் கிருஷ்ணகிரி,ஓசூர், நாகரசம்பட்டி ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 9, 2024

கிருஷ்ணகிரி அருகே 7 பேர் மீது வழக்கு பதிவு 

image

கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் பகுதியில் அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டுகள் வந்த புகார்களின் பேரில் போலீசார் நேற்று அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. இது தொடர்பாக மஞ்சு ( 25) உள்ளிட்ட ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 9, 2024

கிருஷ்ணகிரியில் தீவிர கண்காணிப்பு

image

கர்நாடகா மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது வரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கின்றனர்.இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதன் பாதிப்பு தமிழ்நாட்டில் இல்லாமலிருக்க தமிழக எல்லையான கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

error: Content is protected !!