India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி அருகே, தேர்வு எழுத சென்ற பிளஸ் 2 மாணவியிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர், போக்சோவில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து புகாரின்பேரில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சரவணன் விசாரணை நடத்தினர். அதில், தேர்வு எழுதிய மாணவியிடம் ஆசிரியர் ரமேஷ், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், அதே அறையில் மற்றொரு மாணவியிடமும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரிந்தது.
நீங்கள் மேலே காணும் புகைப்படத்தில் உள்ள கோயில் அமர்நாத் கோவிலோ, வட மாநிலத்திலோ அல்ல. கிருஷ்ணகிரியில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்லப்ப கொண்டா கோயில் தான். இந்த மல்லப்ப கொண்டா மலையின் வியூ பாய்ண்டுகளையும், அங்கு அமைந்திருக்கும் மிகப்பிரமாண்டமான மல்லேஸ்வர சுவாமியை தரிசிக்க குடும்பத்துடன் காலை வேளையை தேர்வு செய்தால் குழந்தைகளுடன் மூணாறுக்கு சென்ற அனுபவத்தை பெறலாம். ஷேர் பண்ணுங்க
பர்கூர் அருகே திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவி நேற்று கிருஷ்ணகிரி – தி.மலை சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் தேர்வு எழுத சென்றுள்ளார். அப்போது அந்த அறையின் மேற்பார்வையாளராக பணியாற்றிய ரமேஷ்(44) மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் ரமேஷை இன்று போக்சோவில் கைது செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.18 வயது 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம் கிடையாது.நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். <
கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் மார்.21ம் அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
தருமபுரி தாசரஅள்ளி பகுதியை சேர்ந்த 75 வயதான வெங்கடேசன், ஓசூர் மலைக்கோவில் அருகே தேர்த் திருவிழாவில் கடை அமைத்து விற்பனை செய்து வந்தார். அப்போது மரத்தில் இருந்த தேனீக்கள் தாக்கியதால் காயம் அடைந்தார். ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, கிருஷ்ணகிரி மலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மலையின் மேற்குப் பகுதியில் 50 அடி உயரத்தில் 80 அடி நீளமான பாறையின் அடியில், மனிதன் தங்கிய அடையாளமாகப் பழமையான வெண் சாந்து பாறை ஓவியங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். இவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஓவியங்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக வைட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்கள் மாலை கண் தொடர்பான நோய்களை தடுப்பதற்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 முதல் மார்ச் 22 வரை 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்துார் அடுத்து செவ்வத்துார் ஊராட்சி மைக்கா மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சி(35) கூலி தொழிலாளி. இவர் நத்தகாயம் கிராமத்தில் தங்கி வேலை செய்து வந்தார். வேலை முடிந்து நேற்று மாலை வீடு திரும்பிய போது நிலைதடுமாறி கீழே விழுந்தவருக்கு வலிப்பு ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மத்துார் போலீசார் ஆஞ்சி உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக வழங்கப்படும் அரசு நலத்திட்டங்களை மாவட்ட அளவில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் தெருமுனை நாடகங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்பணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.